இறுதித் தருணங்களில் ஆறுதலும் ஆதரவும்

1 mins read
a635e33d-2b04-4476-9b0b-34dbc0b7a566
-

குடும்­பத்­தா­ரும் நண்­பர்­களும் இல்­லாத நோயா­ளி­கள், மர­ணத்­தின் விளிம்­பில் இருக்­கும்­போது அவர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­கும் வகை­யாக 'நோடா' திட்­டம் 2001ஆம் ஆண்­டில் தொடங்­கப்­பட்­டது. அமெ­ரிக்­கா­வில் தொடங்­கப்­பட்ட இத்­திட்­டம் இன்று சிங்­கப்­பூர், ஜப்­பான் நாடு­களில் உள்ள மருத்­து­வ­ம­னை­களுக்­கும் அந்­தி­ம­கா­லப் பரா­ம­ரிப்பு இல்­லங்­க­ளுக்­கும் விரி­வு­படுத்­தப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் அலெக்­சாண்­டிரா மருத்­து­வ­ம­னை­யில் 2004ல் திட்­டம் நடப்­புக்கு வந்­தது.

தற்­போது 'நோடா' திட்­டத்­தின் கீழ் 46 தொண்­டூ­ழி­யர்­கள் இயங்­கி­வ­ரு­கின்­ற­னர்.

தனி­மை­யில் இறக்­கும் தரு­வா­யில் உள்ள நோயா­ளி­க­ளுக்­குத் துணை­யாக இருந்­த­வாறு ஆறு­தல் அளிப்­பதே இவர்­க­ளின் வேலை.

திட்­டத்­தில் ஆண், பெண் என 30 வய­துக்­கும் 70 வய­துக்­கும் இடைப்­பட்ட ஓய்­வு­பெற்­ற­வர்­களும் தொழில் நிபு­ணர்­களும் இணைந்து பங்­காற்றி வரு­கின்­ற­னர்.

தீராத நோயின் பிடி­யில் சிக்கி உயி­ரி­ழக்­க­வி­ருப்­போர் 'அசிசி' அந்­தி­ம­கால இல்­லத்­தில் சேர்க்­கப்­ப­டும்­போது தொண்­டூ­ழி­யர்­கள் நோயா­ளி­க­ளு­டன் நண்­பர்­க­ளாகி ஒரு தொடர்பை ஏற்­படுத்­திக்­கொள்­வர்.

இத­னால், நோயா­ளி­யின் இறு­தித் தரு­ணங்­களில் நெருக்­க­மான குடும்ப உறுப்­பி­னரோ நண்­பரோ தரக்­கூ­டிய ஆறு­தலை இந்­தத் தொண்­டூ­ழி­யர்­கள் வழங்­கும் நிலை வந்­து­வி­டும்.

கடந்த ஆண்டு இறு­தி­வரை நோடா@அசிசி திட்­டத்­தின் மூலம் 249 நோயா­ளி­க­ளுக்கு இறு­திக்­கட்ட ஆத­ரவு கிடைத்­திருந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.