வாசிப்பதில் உலகிலேயே ஆகச் சிறந்தவர்கள்: ஆய்வு

சிங்கப்பூர் தொடக்கப்பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறன்

வாசிப்­புத் திற­னில் உல­கின் ஆகச் சிறந்­த­வர்­க­ளாக சிங்­கப்­பூ­ரின் தொடக்­க­நிலை 4 மாண­வர்­கள் உரு­வெ­டுத்­துள்­ள­னர்.

‘அனைத்­து­லக வாசிப்­புத் திற­னில் முன்­னேற்­றம்’ எனும் ஆய்வு முடி­வு­கள் நேற்று வெளி­யி­டப்­பட்­டன. அடித்­தள, உயர்­நிலை வாசிப்­புத் திற­னைப் பொறுத்­த­மட்­டில், மற்ற நாட்டு மாண­வர்­களை­விட இங்­குள்ள மாண­வர்­கள் வலு­வாக இருப்­பது ஆய்­வில் தெரி­வந்­துள்­ளது.

மின்­னி­லக்க பனு­வல்­களை வாசிக்­க­வும் தக­வல்­க­ளின் நம்­ப­கத்­தன்மை குறித்து எளிய முறை­யில் முடி­வெ­டுக்­க­வும், யோச­னை­களை எழுப்­ப­வும் இங்­குள்ள மாண­வர்­க­ளால் முடி­கிறது.

ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடத்­தப்­படும் இந்த ஆய்வு, தொடக்­க­நிலை 4 மாண­வர்­களின் வாசிப்­புத் திற­னை­யும் கருத்­த­றி­த­லை­யும் மதிப்­பி­டு­கிறது.

உல­கம் முழு­வ­தி­லி­ருந்­தும் மொத்­தம் 57 கல்வி முறை­கள் இந்த ஆய்­வில் பங்­கெ­டுத்­தன. கல்­விச் சாதனை மதிப்­பீட்­டுக்­கான அனைத்­து­ல­கைச் சங்­கம் ஆய்­வுக்கு ஆத­ரவு நல்கி, ஆய்வு முடி­வு­க­ளை­யும் வெளி­யிட்­டது. சிங்­கப்­பூர் கல்வி அமைச்சு ஆய்வு முடிவு குறித்த விவ­ரங்­களை வழங்­கி­யது.

இந்த ஆய்வு முழு­மை­யாக இணை­யத்­தில் நடத்­தப்­பட்­டது இதுவே முதன்­முறை. ஆனால், ஆய்வைக் காகித வடி­வில் செய்­வதா இணை­யத்­தில் செய்­வதா என்­பது குறித்து முடி­வெ­டுக்க கல்வி முறை­க­ளுக்கு வாய்ப்பு அளிக்­கப்­பட்­டது.

2021 ஆய்­வில் அயர்­லாந்து இரண்­டா­வது இடத்­தைப் பிடித்­தது. ஹாங்­காங், ரஷ்யா, வட­அயர்­லாந்து ஆகி­யவை அதற்கு அடுத்­த­டுத்த இடங்­களில் வந்­தன. கொவிட்-19 பெருந்­தொற்று கார­ண­மாக தர­வு­க­ளைத் தொகுப்­ப­தில் தாம­தம் ஏற்­பட்­ட­தால் ஆய்வு முடி­வு­கள் இவ்­வாண்­டு­தான் வெளி­யி­டப்­பட்­டன.

இதற்கு முன்­ன­தாக 2016ல் நடத்­தப்­பட்ட ஆய்­வில் 58 கல்வி முறை­கள் பங்­கெ­டுத்­தன. அதில் சிங்­கப்­பூ­ருக்கு இரண்­டா­வது இடம் கிடைத்­தது. ரஷ்யா அப்போது முத­லி­டம் பிடித்­தது.

2020 அக்­டோ­பர், நவம்­பர் மாதங்­களில் நடத்­தப்­பட்ட இந்த ஆய்­வில் 183 தொடக்­கப்­பள்­ளி­களைச் சேர்ந்த 6,719 தொடக்­க­நிலை 4 மாண­வர்­கள் பங்­கேற்­ற­னர்.

உல­கம் முழு­வ­தும் ஏறக்­குறைய 400,000 மாண­வர்­கள் ஆய்­வில் பங்­கெ­டுத்­த­னர்.

கொவிட்-19 பெருந்­தொற்­றுச் சூழ­லி­லும் சிங்­கப்­பூர் மாண­வர்­களின் வாசிப்­புத் திறன், 2016ல் இருந்­த­தை­விட மேம்­பட்­டுள்­ளது. சரா­சரி மதிப்­பெண் 576லிருந்து 587ஆக உயர்ந்­துள்­ளது.

2001ல் இந்த ஆய்வு முதன்­மு­றை­யாக தொடங்­கப்­பட்­ட­தில் இருந்து 20 ஆண்டு காலத்­தில் மாண­வர்­கள் நிலை­யான முன்­னேற்­றம் கண்­டுள்ள ஒரே கல்வி முறை சிங்­கப்­பூர்­தான் என்று கல்வி அமைச்சு வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது.

கடந்த 20 ஆண்டு கால­மாக ஆங்­கில மொழி கற்­பித்­த­லி­லும் பாடத்­திட்­டத்­தி­லும் செய்­யப்­பட்­டு உள்ள மாற்­றங்­கள், உதவி தேவைப்­படும் மாண­வர்­களுக்குக் கூடு­தல் எழுத்­த­றிவு ஆத­ரவு வழங்­கப்­பட்­டி­ருப்­பது, பெருந்­தொற்று காலத்­தில் கற்றல் தொடர்­வதை உறு­தி­செய்ய மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி­கள் இந்த முன்­னேற்­றத்­துக்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் என்று அமைச்சு கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!