ஆறு துறைகளில் கரிமப் பயன்பாட்டை குறைக்க ஓசிபிசி வங்கி உறுதி

ஆறு துறைகளில் கரிமப் பயன்பாட்டை குறைக்க ஓசிபிசி வங்கி உறுதி

1 mins read
09959184-0c13-4701-8c24-28bb5504820d
-

கரி­மப் பயன்­பாடு அதி­க­மு­டைய ஆறு துறை­களில் அதைக் குறைக்க ஓசி­பிசி வங்கி உறு­தி­பூண்­டுள்­ளது.

மின்­சக்தி, எண்­ணெய் மற்றும் எரி­வாயு, சொத்­துச் சந்தை, எஃகு, விமா­னப் போக்­கு­வ­ரத்து, கப்­பல் துறை ஆகி­யவை அதிக கரி­மத்தை வெளி­யேற்­றும் அந்த ஆறு துறை­கள். அவற்­றுக்கு ஓசி­பிசி வங்கி கடன் வழங்­கு­கிறது.

ஓசி­பி­சி­யின் நிறு­வன, வணிக வங்­கி­யி­யல் கடன் தொகுப்­பில் அவை 67 விழுக்­காடு பங்கு வகிக்­கின்­றன. ஆனால், அவற்­றில் 42 விழுக்­காட்டு அளவு மட்­டும் கரி­மப் பயன்­பாட்டு இலக்­கைப் பூர்த்­தி­செய்­கின்­றன.

ஓசி­பிசி எடுத்­துள்ள துணி­கர நட­வ­டிக்­கை­யில், 2021க்குப் பிறகு மேம்­பாட்­டிற்­காக ஒப்­பு­தல் பெற்ற எண்­ணெய் மற்­றும் எரி­வாயு திட்­டங்­க­ளுக்கு அவ்­வங்கி நிதி வழங்­காது. ஓசி­பிசி வெளி­யிட்­டுள்ள அறிக்கை ஒன்­றில் இந்த விவ­ரம் தெரி­விக்­கப்­பட்­டது.

"இந்த முடி­வால் வரு­வாய் குறைந்­தா­லும், நாங்­கள் கருத்­தில்­கொள்­ளும் பிர­தான அம்­சம் அது­வல்ல. கரி­மப் பயன்­பாட்டைக் குறைப்­ப­தில் நாங்­கள் கடப்­பாடு கொண்­டுள்­ளோம். எனவே, வரு­வாய் என்­பது இரண்­டா­வது விஷ­யம்," என்று ஓசி­பி­சி­யின் உல­க­ளா­விய மொத்த விற்­பனை வங்­கி­யி­யல் நீடித்த நிலைத்­தன்மை அலு­வ­ல­கத் தலை­வர் மைக் இங் கூறி­னார்.

மின்­சக்­தித் துறை­யைப் பொறுத்­த­மட்­டில், 2030க்குள் கரிம வெளி­யேற்­றத்தை 55 விழுக்­காடு குறைக்­க­வும் 2040க்குள் அதை 100 விழுக்­காடு குறைக்­க­வும் ஓசி­பிசி இலக்கு கொண்­டுள்­ளது. உல­க­ள­வில் கரிம வெளி­யேற்­றத்­தில் மின்­சக்­தித் துறை 40 விழுக்­காடு அங்­கம் வகிக்­கிறது.