சட்டவிரோத வாகனப் பகிர்வு சேவை: மூன்று வாகனமோட்டிகளிடம் ஆணையம் விசாரணை

சட்டவிரோத வாகனப் பகிர்வு சேவை: மூன்று வாகனமோட்டிகளிடம் ஆணையம் விசாரணை

1 mins read
05fab1a1-4930-432e-ac38-50aa8fbda039
-

நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் மே மாதத் தொடக்­கத்­தில் நடத்­திய அம­லாக்க நட­வ­டிக்­கை­யில் இரு கார் ஓட்­டு­நர்­கள், ஒரு மோட்­டார்­சைக்­கி­ளோட்­டிக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு அவர்­க­ளது வாக­னங்­கள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டன.

சட்­ட­வி­ரோத வாக­னப் பகிர்வு சேவை வழங்­கும் வாக­ன­மோட்­டி­க­ளைக் குறி­வைத்து அம­லாக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக ஆணை­யம் நேற்று அதன் ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டது.

இரு கார்­களும் ஒரு மோட்­டார்­சைக்­கி­ளும் இழுத்­துச் செல்­லப்­ப­டு­வ­தைப் புகைப்­ப­டங்­கள் காட்­டின.

"பய­ணி­க­ளின் சொந்த பாதுகாப்­புக்­காக, ஓரி­டத்­தில் இருந்து மற்­றோர் இடத்­துக்­குச் செல்ல முன்­ப­திவு செய்ய விரும்பு­வோர், உரி­மம் பெற்ற வர்த்­த­கத் தளங்­களைப் பயன்­படுத்­து­மாறு கேட்டுக்­கொள்­ளப்­படு­கின்­ற­னர்," என்று ஆணை­யம் குறிப்­பிட்­டது.