ஈசூனில் குடியிருப்பு புளோக் ஒன்றின் தரைத் தளத்தில் உள்ள காப்பிக் கடையில் தீ மூண்டதை அடுத்து, 64 பேர் வெளியேற்றப்பட்டனர்.
புளோக் 747 ஈசூன் ஸ்திரீட் 72ல் நிகழ்ந்த தீச்சம்பவம் குறித்து நேற்று முன்தினம் பின்னிரவு 12.40 மணிக்கு தனக்கு தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
காப்பிக் கடைக்குள் தான் பலவந்தமாக நுழைய நேரிட்டதாகக் கூறிய அது, நீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தது. தீயினால் சமையலறை சேதமடைந்தது. எனினும், இதில் எவருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை என்று குடிமைத் தற்காப்புப் படை கூறியது. காப்பிக் கடைக்கு மேலே வசிப்பவர்களுக்குப் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்று நீ சூன் குழுத்தொகுதி
எம்.பி. முகம்மது ஃபைஷால் இப்ராஹிம் தெரிவித்தார்.

