கல்வி ஆதரவு சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் இயக்குநர் ஒருவர், பாலியல் உறவு கொள்வதற்காக 17 வயது இளையர் ஒருவரிடம் ரொக்கம் வழங்க முன்வந்தார். பணத்தைப் பெற அந்த இளையர் தொடக்கத்தில் தயங்கினார்.
ஆனால், 'பீக்கன் இன்டர்நேஷனல் மேனேஜ்மண்ட் குரூப்'பைச் சேர்ந்த சென் யியுவான் (படம்), அந்த இளையரைத் தொந்தரவு செய்தார். தாம் ஓரினச்சேர்க்கையாளர் இல்லை என்றும் அத்தகைய பாலியல் நடவடிக்கைகளில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் அந்த இளையர் கூறியபோதும் சென் அவரை விடவில்லை.
2022 மார்ச் 12ஆம் தேதி தமது வீட்டிற்கு அழைத்துச் செல்ல அந்த இளையரை சென் சம்மதிக்க வைத்தார். பாலியல் உறவு செய்த பின்னர் அந்த இளையருக்கு சென் $200 கொடுத்தார்.
பதினெட்டு வயதுக்குக் குறைந்த ஒருவருடன் பாலியல் உறவு கொண்ட குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சென்னுக்கு நேற்று ஆறு வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

