சிங்கப்பூரில் சுகி. சிவம் பட்டிமன்றம்

2 mins read
992affd4-8924-4550-82a8-0d98ae8636c9
-
multi-img1 of 2

ஆ. விஷ்ணு வர்­தினி

சொல்­வேந்­தர் சுகி. சிவத்­தின் (படம்) தலை­மை­யில் தமி­ழ­கத்­தின் முன்­னணி மேடைப் பேச்­சா­ளர்­கள் பங்­கேற்­கும் பட்­டி­மன்­றம் சிங்­கப்­பூ­ரில் இடம்­பெ­ற­வி­ருக்­கிறது.

'சமூக ஊட­கங்­கள் வரமா? சாபமா?' எனும் தலைப்­பி­லான இப்­பட்­டி­மன்­றம், வரும் சனிக்கிழமை (மே 20) கார்­னி­வல் திரை­ய­ரங்­கில் இடம்­பெ­றும்.

நகைச்­சு­வை­யோடு ஆழ­மான, சிந்­திக்க வைக்­கும் கருத்­து­களை மக்­கள் எதிர்­பார்க்­க­லாம் என்று தமிழ் முர­சி­டம் கூறி­னார் திரு சுகி. சிவம். சுவை­யான விவா­தத்தைப் படைக்க பேச்­சா­ளர்­கள் தயா­ரா­கிக்கொண்­டி­ருப்­ப­தாக அவர் தெரி­வித்­தார்.

இரு­மு­னைக் கத்­தியை ஒத்த சமூக ஊட­கங்­க­ளின் நன்மை தீமை­களை ஆராய்­வ­தோடு நின்று­வி­டா­மல், சிங்­கப்­பூர் மக்­க­ளுக்கே உரிய சவால்­களை இப்பட்­டி­மன்­றத்­தில் பேச்­சா­ளர்­கள் முன்­வைக்க உள்­ள­னர் என்­றார் அவர்.

"வயிறு குலுங்­கச் சிரிக்க வைத்தே பார்­வை­யா­ளர்­க­ளின் தவ­று­களை உணர்த்­து­வது பட்­டி­மன்­றத்­தின் சிறப்­பம்­சம். இது வேறெந்த ஊட­கத்­தி­லும் சாத்­தி­ய­மன்று," என்று பட்­டி­மன்­றங்­க­ளின் நோக்­கங்­க­ளைக் குறிப்­பிட்­டார் திரு சுகி. சிவம்.

தமது தனித்­து­வ­மான நையாண்டி பாணிக்­காக அறி­யப்­படும் திரு மோக­ன­சுந்­த­ர­மும் பேச இருக்­கின்­றார். குடும்ப ஆண்­க­ளுக்­குத் தொடர்­பு­டைய நகைச்­சு­வை­யால் ஏரா­ள­மா­னோ­ரின் மனங்­க­வர்ந்து வரும் இவர், இவ்­வாண்டு வெளி­வந்த 'துணிவு' திரைப்­ப­டத்­தின்­மூ­லம் ஒரு நடி­க­ரா­கத் திரை­யு­ல­கி­லும் அடி­ எடுத்து வைத்­துள்­ளார்.

'சமூக ஊட­கங்­கள் சாபமே' எனும் அணிக்­கா­கப் பேச­வி­ருக்­கும் திரு மோக­ன­சுந்­த­ரம், சிங்­கப்­பூ­ரில் தனியாக உரை­யாற்­றும்­போதும் பட்­டி­மன்­றத்­தில் பேசும்­போ­தும் மக்­கள் தந்த ஆத­ரவு ஊக்­க­ம­ளிப்­ப­தாகக் குறிப்­பிட்­டார்.

திரு­வாட்டி சாந்­தா­மணி, திரு மனோஜ் பிர­பா­கர் இரு­வ­ரும் 'சாபமே' என்ற அணி­யில் இடம்­பெற்­றுள்­ள­னர்.

திரு ராம்­கு­மார், திரு தேவ­கோட்டை இரா­ம­நா­தன், திருவாட்டி அறந்­தாங்கி நிஷா ஆகி­யோர் 'சமூக ஊட­கங்­கள் வரமே' எனும் அணிக்­காக வாதி­டு­வர்.

சிங்­கப்­பூர் பட்­டி­மன்­றங்­களில் பல­முறை பட்­டி­மன்ற நாய­க­ராய்ச் செய­லாற்­றி­யுள்ள திரு சுகி. சிவம், சிங்­கப்­பூர் பார்­வை­யா­ளர்­களு­டன் இணை­வதை ஆவ­லு­டன் எதிர்­பார்க்­கி­றார்.

"நகைச்­சு­வை­யான கருத்­து­களை மட்­டு­மன்றி, ஆழ்ந்த கருத்­து­க­ளை­யும் ஆர­வா­ரத்­துடன் வர­வேற்­ப­வர்­கள் சிங்­கப்பூர்த் தமிழ் மக்­கள். உழைப்­பாளி­க­ளான, தன்­னொ­ழுக்­கம் மிகுந்­த­வர்­க­ளான அவர்­கள் பட்­டி­மன்­றங்­களை இன்­னும் ஆக்­க­பூர்­வ­மாக்­கு­கின்­ற­னர்," என்று அவர் குறிப்­பிட்­டார்.

சீதா மீடியா, கே.எஸ். டாக்­கீஸ், மாஸ்க் ஸ்டூ­டி­யோஸ் ஆகி­யவை இணைந்து வழங்­கும் இப்­பட்­டி­மன்­றத்­துக்­கான நுழை­வுச்­சீட்­டு­களை sg.bookmyshow.com/e/sukisiva என்ற இணை­யப்­பக்­கம் வழி­யாக வாங்­க­லாம்.