சிங்கப்பூரில் உலகின் ஆகப்பெரிய உற்பத்தி ஆலை

சிங்கப்பூரில் உலகின் ஆகப்பெரிய உற்பத்தி ஆலை

2 mins read
9d9a3d06-529e-4826-bfbb-0376b81fa7c9
-

சமை­யல் எண்­ணெய், விலங்­கு­களின் கொழுப்பு போன்ற கழி­வுப் பொருள்­க­ளி­லி­ருந்து விமான எரி­பொ­ருள் தயா­ரிக்­கும் உல­கின் ஆகப் பெரிய உற்­பத்தி ஆலை சிங்­கப்­பூ­ரில் திறக்­கப்­பட்­டுள்­ளது. கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்­தைக் குறைக்­கும் முயற்­சி­யில் சிங்­கப்­பூ­ருக்கு இது குறிப்­பி­டத்­தக்­க­தொரு படி.

பின்­லாந்து எரி­சக்தி ஜாம்­ப­வா­னா­கக் கரு­தப்­படும் 'நெஸ்ட்டெ' நிறு­வ­னம் அதன் செயல்­பா­டு­களை துவாஸ் சவுத் சுத்­தி­க­ரிப்பு ஆலைக்கு விரி­வு­ப­டுத்­தி­யுள்­ளது. 2019ஆம் ஆண்­டில் தொடங்­கிய இந்த $2.3 பில்­லி­யன் திட்­டம், கொவிட்-19 கொள்­ளை­நோ­யால் ஓராண்டு தாம­த­மா­னது.

அதை­ய­டுத்து, ஆண்­டுக்கு ஒரு மில்­லி­யன் டன் அள­வி­லான நீடித்த நிலைத்­தன்­மை­யு­டைய விமான எரி­பொ­ருளை (எஸ்­ஏ­எஃப்) உற்­பத்தி செய்­யும் ஆற்­றலை ஆலை தற்­போது பெற்­று­விட்­டது. இது, 'நெஸ்ட்டெ' நிறு­வனத்­தின் முந்­தைய ஆற்­ற­லைக் காட்­டி­லும் பத்து மடங்கு அதி­க­மா­கும்.

புதுப்­பிக்­கத்­தக்க டீசல் எண்­ணெய், புதுப்­பிக்­கத்­தக்க மூலப்­பொ­ருள்­கள் போன்­ற­வற்­றை­யும் தயா­ரிக்­கும் இந்த ஆலை­யில் உற்­பத்­திப் பணி­கள் கடந்த மாதம் தொடங்­கி­விட்­டன. இவ்­வாண்டு இறு­திக்­குள் உற்­பத்தி வேலை­கள் மேலும் மும்­மு­ர­மா­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

சுற்­றுச்­சூ­ழ­லுக்கு அதிக பாதிப்பை ஏற்­ப­டுத்­தாத எரி­பொரு­ளுக்­கான தேவை, விமா­னத்­து­றை­யில் அதி­க­ரித்து வரு­கிறது.

இதற்­கி­டையே ரோட்­டர்­டா­மில் உள்ள அதன் ஆலை­யில் மாற்­றங்­கள் செய்து 'நெஸ்ட்டெ' தன் உற்­பத்தி ஆற்­றலை அடுத்த ஆண்டு தொடக்­கத்­துக்­குள் பெருக்­கிக்­கொள்ள விரும்­பு­வதாகக் குறிப்­பிட்­டது.

ஒருங்­கி­ணைந்த ஓர் 'எஸ்­ஏ­எஃப்' விநி­யோ­கச் சங்­கி­லியை சாங்கி விமான நிலை­யத்­து­டன் 'நெஸ்ட்டெ' ஏற்­ப­டுத்­தி­விட்­ட­தாக நிறு­வ­னத்­தின் இடைக்­கால நிர்­வா­கத் துணைத் தலை­வர் திரு சாமி யாவ்­ஹி­யாய்­நென் தமது அறிக்­கை­யில் கூறி­னார்.

விமா­னங்­க­ளுக்கு 'எஸ்­ஏ­எஃப்'பை நேர­டி­யாக நெஸ்ட்டெ வழங்­கும் நிலை­யில், சான் ஃபிரான்­சிஸ்கோ அனைத்­து­லக விமான நிலை­யம், லாஸ் ஏஞ்சலிஸ் அனைத்­து­லக விமான நிலை­யம், ஆம்ஸ்­டர்­டா­மில் உள்ள ஸ்கிப்­போல் விமான நிலை­யம் போன்­றவை அடங்­கிய ஓர் அனைத்­து­ல­கக் கட்­ட­மைப்­பில் சாங்கி விமான நிலை­ய­மும் இணைந்­து­விட்­டது.

விரி­வு­ப­டுத்­தப்­பட்ட சுத்­தி­கரிப்பு ஆலை­யின் திறப்பு விழா­வில் நேற்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் கலந்­து­கொண்­டார்.

குறைந்த கரி­ய­மில வாயு பய­ணங்­க­ளுக்கு 'எஸ்­ஏ­எஃப்' செயல்­தி­றன்­மிக்க ஓர் அம்­ச­மா­கும் என்­றார் திரு கான்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கி ஓராண்டு முன்­னோட்­டத் திட்­டத்­தில் சாங்கி விமான நிலை­யத்­தி­லி­ருந்து இயக்­கப்­பட்ட சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ், ஸ்கூட் நிறு­வ­னங்­க­ளின் விமா­னங்­கள் வழக்­க­மான விமான எரி­பொ­ரு­ளு­டன் நெஸ்ட்டெ நிறு­வ­னத்­தின் 'எஸ்­ஏ­எஃப்'பைக் கலந்து பயன்­படுத்தி வரு­வ­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.