எஸ்ஐஏ: முன்னேற்பாடுகளால் சாதனை வருவாய் ஈட்டினோம்

எஸ்ஐஏ: முன்னேற்பாடுகளால் சாதனை வருவாய் ஈட்டினோம்

2 mins read
b8f57b53-f374-4d72-8281-c37848701ba0
-

முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ) நிறு­வ­னம் வரு­வாய் ஈட்­டி­யுள்­ளது. கொவிட்-19 கொள்­ளை­நோய் கால­கட்­டத்­தில் மும்­மு­ர­மாக ஆயத்­தப் பணி­களில் நிறு­வ­னம் ஈடு­பட்­டதே இதற்­குக் கார­ணம் என்­றார் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாகி கோ சூன் பொங்.

கொவிட்-19 ஒரு முடி­வுக்கு வந்­த­தும் நிறு­வ­னத்­தின் செயல்­பா­டு­கள் தொடங்­கிட, சரி­யான வளங்­கள் தயார்­நி­லை­யில் இருப்­பதை உறு­தி­செய்­யும் தன்­மை­யைக் குழு­மம் பெற்­றி­ருந்­த­தால் சாதனை வரு­வாய் ஈட்ட முடிந்­த­தாக அவர் தெரி­வித்­தார்.

"எல்­லை­கள் மீண்­டும் திறந்­த­போது முத­லில் பய­ணங்­க­ளைத் தொடங்­கும் ஆற்­றல் எங்­க­ளி­டம் இருந்­தது," என்று ஆய்­வா­ளர்­களி­ட­மும் செய்­தி­யா­ளர்­க­ளி­ட­மும் திரு கோ நேற்று கூறி­னார்.

தற்­போ­தைய நிதி ஆண்­டுக்­கான சாத­னை­ய­ளவு வரு­வாய் மற்­றும் லாபம் தொடர்­பான விவ­ரங்­களை நிறு­வ­னம் நேற்று முன்­தி­னம் வெளி­யிட்­டது.

சாதனை எண்­ணிக்­கை­யில் பய­ணி­களை ஏற்­றிச் சென்ற கார­ணத்­தா­லும் இது சாத்­தி­ய­மா­ன­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

ஓராண்­டுக்­கு­முன் நிறு­வ­னத்­திற்கு நேர்ந்த இழப்பு $962 மில்­லி­யன். இந்­நி­லை­யில், இவ்­வாண்டு மார்ச் 31ஆம் தேதி­யுடன் முடி­வ­டைந்த ஆண்­டில் பதி­வான லாபம் $2.16 பில்­லியன்.

மேலும், நடை­முறை லாபம் முந்­தைய ஆண்­டின் $610 மில்லியன் நட்­டத்தை முறி­ய­டித்து $2.69 பில்லியன் லாபத்தை எட்­டி­யது.

கொள்­ளை­நோய் 2020ஆம் ஆண்­டில் முழு­வீச்­சில் இருந்து எல்­லை­கள் மூடப்­பட்டு, பெரும்­பா­லான விமா­னங்­களை எஸ்­ஐஏ முடக்க நேரிட்­ட­போ­தும் நெருக்­கடிக்­குப்­பின் மீள்­வது குறித்து நிறு­வ­னம் அப்­போதே திட்­ட­மி­டத் தொடங்­கி­விட்­ட­தாக திரு கோ கூறி­னார்.

இந்­தத் திட்­ட­மி­டு­த­லால் எல்­லை­கள் மீண்­டும் திறந்­த­போது மற்ற விமான நிறு­வ­னங்­க­ளைக் காட்­டி­லும் மேலும் விரை­வா­க­வும் செயல்­தி­றத்­து­ட­னும் எஸ்­ஐஏ அதன் விமா­னப் பய­ணங்­க­ளைத் தொடங்க நிதி­யும் மனி­த­வ­ள­மும் செயல்­பாட்டு வளங்­களும் இருந்­தன என்று திரு கோ விளக்­கினார்.

இதற்­கி­டையே, தன் ஊழி­யர்­க­ளுக்கு ஆறு மாத ஊதி­யத்தை போன­சாக சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் கொடுத்து வரு­வதாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் அறி­கிறது.