60 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்படும் அலெக்சாண்டிரா அஞ்சல் அலுவலகம்

60 ஆண்டுகளுக்குப் பிறகு மூடப்படும் அலெக்சாண்டிரா அஞ்சல் அலுவலகம்

1 mins read
6909087c-8738-44c4-8725-d5454eda4bc1
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

புக்கிட் மேரா வட்டாரத்தில் வசிப்போரின் அஞ்சல் தேவைகளை

60 ஆண்டுகளுக்கும் மேலாக பூர்த்திசெய்துவரும் அலெக்சாண்டிரா அஞ்சல் அலுவலகம், வரும்

ஜூன் 17ஆம் தேதியன்று நிரந்தரமாக மூடப்படவுள்ளது.

110 அலெக்சாண்டிரா ரோட்டில் அமைந்துள்ள அதன் கட்டடம், காற்பந்துத் திடலின் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கு உள்ளது. அந்த வட்டாரத்தில் சுமார் 1,500 பிடிஓ வீடுகளைக் கட்ட திட்டம் உள்ளதால், கட்டடம் அமைந்துள்ள நிலத்தை அரசாங்கம் கையகப்படுத்தி உள்ளது. 1957ஆம் ஆண்டில் அப்போதைய தொடர்பு, பணிகள் அமைச்சர் ஃபிரான்சிஸ் தாமஸ் கட்டடத்தைத் திறந்துவைத்தார்.