தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக எண்ணெய் சாரா ஏற்றுமதி சரிவு ஏப்ரலில் மொத்த வர்த்தகம் 18.8% குறைந்தது

தொடர்ந்து ஒன்பதாவது மாதமாக எண்ணெய் சாரா ஏற்றுமதி சரிவு ஏப்ரலில் மொத்த வர்த்தகம் 18.8% குறைந்தது

2 mins read
f3f13270-659c-4023-8f90-b249c9e0041f
-

சிங்­கப்­பூ­ரின் முக்­கிய ஏற்­று­மதி ஆண்டு அடிப்­ப­டை­யில் தொடர்ந்து ஏழா­வது மாத­மாக ஏப்­ர­லில் சரி­வைக் கண்­டுள்­ளது. ஆண்டு அடிப்­ப­டை­யில் மார்ச்­சில் 8.3 விழுக்­காடு சரிவு கண்ட எண்­ணெய் சாராத உள்­நாட்டு ஏற்­று­மதி, ஏப்­ர­லில் 9.8 விழுக்­காடு சரிந்­தது என்று என்று எண்­டர்­பிரைஸ் சிங்­கப்­பூர் நேற்று வெளி­யிட்ட புள்­ளி­வி­வ­ரங்­கள் காட்­டின.

ஆண்­டின் இரண்­டாம் பாதி­யில் முன்­னேற்­றம் ஏற்­ப­டு­வ­தற்கு முன்­னர் இன்­னும் சில மாதங்­கள் சரி­வைக் காணும் என்று பொரு­ளி­ய­லா­ளர்­கள் கணித்­துள்­ள­னர்.

ராய்ட்­டர்ஸ் கருத்­துக்­க­ணிப்­பில் பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் கணித்த 9.4% சுருக்­கம், புளூம்­பெர்க் கருத்­துக் கணிப்பு காட்­டிய 9.6% வீழ்ச்­சி­யை­விட இது சற்று மோசம்.

மின்­னணு ஏற்­று­மதி ஆண்டு அடிப்­ப­டை­யில், மார்ச் மாத 22.3% சரி­வைத் தொடர்ந்து ஏப்­ர­லில் 23.3% குறைந்­தது. ஒருங்­கிணைந்த மின்­சுற்று (ஐசி), தனிப்­ப­யன்­பாடு கணி­னி­கள், டிஸ்க் மீடியா பொருள்க­ளின் ஏற்­று­மதி முறையே 21%, 50.3%, 41.6% சுருங்­கி­யது.

மார்ச் மாத 4.7% விழுக்­காடு சரி­வைத் தொடர்ந்து, மின்­னி­யல் தவிர்த்த எண்­ணெய் சாரா பொருள்க­ளின் ஏற்­று­மதி ஏப்­ர­லில் 5.8% குறைந்­தது. பெட்­ரோ­லிய வேதிப்பொருள், முதன்மை வேதிப்பொருள்கள், உணவு தயா­ரிப்­பு­களில் ஏற்­பட்ட சுருக்­கத்­தால் இந்த வீழ்ச்சி ஏற்­பட்­டது.

மின்­னி­யல் பொருள்கள் ஏற்­று­ ம­தி­யால் தொடர்ந்து ஒன்­பது மாதங்­கள் சரிவு ஏற்­பட்­டது ஒரு முக்­கியக் கவ­லை­யாக இருந்­தது.

மாதாந்­திர அடிப்­ப­டை­யில், மருந்து ஏற்­று­மதி அதி­க­ரித்­த­னால் எண்­ணெய் சாரா ஏற்­று­மதி 2.7 விழுக்­காடு உயர்ந்து $16.1 பில்­லி­ய­னாக இருந்­தது.

இதற்­கி­டையே, ஏப்­ரல் மாதத்­துக்­கான ஒட்­டு­மொத்த வர்த்­த­கம் சரிந்­தது. 2022ஆம் ஆண்­டின் ஏப்­ரல் மாதத்­து­டன் ஒப்­பிட சென்ற ஏப்­ரல் மாதத்­தில் மொத்த வர்த்­த­கம் 18.8% குறைந்­துள்­ளது. இது மார்ச்­சில் 8.6% குறைந்­தது.

ஆசி­யான் உட்­பட சிங்­கப்­பூரின் முதல் 10 சந்­தை­களில் ஏழுக்கான உள்­நாட்டு எண்­ணெய் சாரா பொருள்கள் ஏற்­று­மதி ஏப்­ரலில் இரட்டை இலக்­கச் சுருக்­கத்­தைக் கண்­டது.

எனி­னும், அமெ­ரிக்கா, தென் கொரியா, ஐரோப்­பிய ஒன்­றி­யம் ஆகி­ய­வற்­றுக்­கான ஏற்­று­மதி முறையே 40.7%, 38.9%, 4.3% அதி­க­ரித்தது.

ஏப்­ரல் மாதத்­தில் சீனா­வுக்­கான பெட்­ரோ­லிய வேதிப்பொருள் மருந்­து­கள், ஒருங்­கி­ணைந்த மின்­சுற்­று­கள் ஆகி­ய­வற்­றின் ஏற்­று­மதி குறைந்­த­தால், அந்­நாட்­டுக்­கான எண்­ணெய் சாரா ஏற்­று­மதி 20.9% சுருங்­கி­யது. அதே­போல் மலே­சியா­வுக்­கான ஏற்­று­மதி 35 விழுக்­கா­டும், தைவா­னுக்­கான ஏற்­று­மதி 27.5 விழுக்­கா­டும் குறைந்­தன.

இந்­தோ­னீ­சியா, தைவான், தென்கொரி­யா­ ஆகிய இடங்­க­ளின் கீழி­றங்­கும் வர்த்­தக தர­வு ­க­ளைப் பார்க்­கை­யில் வர்த்­த­கம் சார்ந்த சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் ஆபத்தை எதிர்­நோக்­கு­வ­தாக கணிப்­பா­ளர்­கள் கரு­து­கின்­ற­னர்.