சட்டவிரோத இறக்குமதி: 6.8 டன் உணவுப்பொருள்கள் பறிமுதல்

சட்டவிரோத இறக்குமதி: 6.8 டன் உணவுப்பொருள்கள் பறிமுதல்

2 mins read
0ddd8542-a90d-4c51-a314-3c6592ab84e2
-

தாய்­லாந்து, மியன்­மார் நாடு­க­ளி­லி­ருந்து சட்­ட­வி­ரோ­த­மாக இறக்கு­மதி செய்­யப்­பட்ட கிட்டத்தட்ட 6.8 டன் உண­வு­ப் பொருள்கள் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளன. டெக்ஸ்­டைல் சென்­டர், பெனின்­சுலா பிளா­சா­வில் உள்ள சில்­லறை விற்­ப­னைக் கடை­கள் உட்­பட பல இடங்­களில் கடந்த வியா­ழன் முதல் சனி­வரை நடத்­தப்­பட்ட சோத­னை­யில் இவை கைப்­பற்­றப்­பட்­டதாக சிங்­கப்­பூர் உணவு முகவை (எஸ்­எஃப்ஏ) நேற்று தெரிவித்தது.

பட்­டுப்­பு­ழுக்­கள் உள்­ளிட்ட பெரிய அள­வி­லான பூச்சி உணவுப் பொருள்க­ளை­யும், மாடு, பன்றி, ஆட்­டி­றைச்சி வகைகள், கோழி, பன்­றி­யின் ரத்­தம் போன்ற பதப்­ப­டுத்­தப்­பட்ட மற்­றும் சமைக்­கப்­ப­டாத இறைச்­சிப் பொருள்களை மாண்­டாய் லிங்க் தொழிற்­சாலைக் கட்­ட­டத்­திற்கு அரு­கில் ஒரு வாக­னத்­தில் அதிகாரிகள் கண்­டு­பி­டித்­த­னர். இவை தாய்லாந் ­திலிருந்து முறை­யான உரிமமின்றி சட்­ட­வி­ரோ­த­மாக இறக்­கு­மதி செய்­யப்­பட்­டவை. அந்­தக் கட்­ட­டத்­தி­லுள்ள ஒரு கிடங்­கில், இரு நிரந்­த­ர­வா­சி­கள் மூன்று குளிர்­சா­த­னப் பெட்­டி­கள் கொண்ட உரி­மம் பெறாத கடையை நடத்தி வந்ததும் கண்­ட­றி­யப்­பட்­டது.

டெக்ஸ்­டைல் சென்­டர், பெனின்­சுலா பிளா­சா­வில் உள்ள எட்டு சில்­லறை விற்­ப­னைக் கடை­களில் தாய்­லாந்து, மியன்­மா­ரி­லி­ருந்து இறக்­கு­மதியான பதப்­ப­டுத்­தப்­பட்ட மற்­றும் சமைக் காத இறைச்சி, பூச்­சி­கள் சட்­ட­வி­ரோ­த­மாக விற்­கப்­ப­டு­வதை அதி­கா­ரி­கள் கண்­டு­பி­டித்­த­னர்.

இவற்­றில் மூன்று நிறு­வ­னங்­கள் முறை­யான உரி­மம் இல்­லா­மல் இயங்கி வந்­தன.

அறி­யப்­ப­டாத மூலங்­க­ளி­லிருந்து சட்­ட­வி­ரோ­த­மாக இறக்­கு­மதியாகும் உண­வுப் பொருள்­கள் உண­வுப் பாது­காப்பு அபா­யத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டும் என்று சிங்­கப்­பூர் உணவு முகவை எச்­ச­ரித்­துள்­ளது. சிங்­கப்­பூ­ரின் உண­வுப் பாது­காப்­புத் தரத்­துக்கு இணங்க அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட நாடு­க­ளின் அங்­கீ­கா­ரம் பெற்ற மூலங்­க­ளி­லிருந்து மட்­டுமே இறைச்சி மற்றும் அதன் தயா­ரிப்­பு­களை உரி­மம் பெற்ற இறக்­கு­மதி­யா­ளர்­கள் இறக்குமதி செய்ய லாம் என்­றும் அது கூறி­யது.

விற்­பனை நோக்­கத்­திற்­காக அனு­ம­தி­யின்றி இறக்­கு­மதி செய்­யப்­பட்ட இறைச்சி, கடல் உண­வுப் பொருள்­களை வைத்­தி­ருந்­த­தாக குற்­றம் சாட்­டப்­பட்­ட­வர்­க­ளுக்கு $50,000 வரை அப­ரா­தம், இரண்டு ஆண்­டு­கள் வரை சிறை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம். மீண்­டும் மீண்­டும் குற்­றம் புரி­வோ­ருக்கு $100,000 வரை அப­ரா­தம், மூன்று ஆண்­டு­கள் வரை சிறை அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.