தற்காப்பு அமைச்சு: வெப்பத்திலிருந்து வீரர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்

தற்காப்பு அமைச்சு: வெப்பத்திலிருந்து வீரர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்

2 mins read
0564e3a8-6a30-4124-8f1a-a7d4ba6175db
-

வீரர்­க­ளின் உடல் வெப்­ப­நி­லை­யைக் கட்­டுக்­குள் வைத்­தி­ருக்­க­வும் வெப்­பக் காயங்­க­ளி­லி­ருந்து அவர்­க­ளைப் பாது­காக்­க­வும் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை (எஸ்­ஏ­எஃப்) ஏற்­கெ­னவே நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது. எனி­னும், அதி­க­ரித்­து­வ­ரும் வெப்­ப­நிலை உயர்­வைச் சமா­ளிக்க கூடு­தல் நட­வ­டிக்­கை­கள் தேவைப்­ப­ட­லாம்.

வீரர்­கள் தற்­போது பனிக்­கட்­டி­களை உட்­கொள்­வது, தண்­ணீர் அணி­வ­குப்பு போன்ற மேற்­பார்­வை­யின்­கீழ் நீர் அருந்­தும் பயிற்­சி­களை மேற்­கொள்­கின்­ற­னர்.

மேலும் கடி­ன­மான நட­வ­டிக்­கை­க­ளின்­போது உடை­கள், சுமைகளின் தேவை­களை மாற்­றி­ய­மைக்­க தள­பதி­களுக்கு நீக்குப்போக்கு உண்டு­ என்று நேற்று வெளி­யி­ட்ட அறிக்கையில் தற்­காப்பு அமைச்சு கூறி­யது.

ஈரப்­ப­தம், சூரிய வெப்­பம் விழும் கோணம், சூரி­யக் கதிர்­வீச்சு ஆகி­ய­வற்­றின் விளை­வு­களை கணக்­கில் கொள்­ளும் பூகோள வெப்­ப­நி­லை­யின் அடிப்­படை­யில் வீரர்­க­ளின் பணி- ஓய்வு நேர சுழற்சி இருப்­ப­தால், வெப்­பத்­தால் ஏற்­படும் காயங்­களின் அபா­யத்­தைத் தணிக்க பயிற்சி அட்­ட­வ­ணை­களை மாற்­றி­ய­மைக்க முடி­யும்.

அடிப்­படை ராணு­வப் பயிற்­சி­யில் சேரும்­போது அல்­லது அவர்­கள் சிறப்­புப் பயிற்­சித் திட்­டங்­கள் அல்­லது நட­வ­டிக்­கை­களில் ஈடு­படும்­போது வீரர்­களுக்கு அளிக்கப்படும் வெப்­பத்­தைப் பழக்­கப்­படுத்­தும் பயிற்­சி­களோடு கூடுதலாக இவை உள்ளன.

சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­ முழுவதுமே வெப்­பக் காயங்­கள் குறித்து மிகுந்த கவனம் செலுத்­தப்­ப­டு­வ­தா­க­வும் பிரி­வு­கள் அன்றாட சம்­ப­வங்­களை தெரி­விக்க வேண்­டும் என்­றும் அமைச்சு குறிப்­பிட்­டது.

"உல­க­ளா­விய வெப்­ப­நிலை மேலும் உய­ரக்­கூ­டும் என்­ப­தால், வெப்ப மீள்­தி­றன், செயல்­தி­றன் முயற்­சி­களை மேம்­ப­டுத்த எஸ்­ஏ­எஃப் அறி­வி­யல் அடிப்­ப­டை­யி­லான அணு­கு­மு­றையை பின்­பற்ற வேண்­டும்," என்று அமைச்சு கூறி­யது. ஜன­வரி மாதம் வெப்ப மீள்­தி­றன், செயல்­பாட்டு மையம் தொடங்­கப்­பட்­டது.

2018ல் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட எஸ்­ஏ­எஃப்பில் பருவநிலைக்கு ஏற்ற 'ஹைபிரிட்' சீருடை, 2020ல் அறிமு­க­மான மறு­வ­டி­வ­மைப்பு செய்­யப்­பட்ட சுமை தாங்­கும் அமைப்பு உள்­ளிட்ட உடை­க­ளை­யும் உப­க­ர­ணங்­க­ளை­யும் மேம்­படுத்­து­வது உட்­பட, சிறந்­த­மு­றை­யில் வடி­வ­மைக்­கப்­பட்ட உப­க­ர­ணங்­களும் வெப்­பத்தை வெளி­யேற்­றக்­கூ­டிய ஆடை­களும் ஆரா­யப்­ப­டு­கின்­றன என்று அமைச்சு கூறி­னது.

"சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யின் ஒருங்­கி­ணைந்த முயற்­சி­கள் காலப்­போக்­கின் கடு­மை­யான வெப்ப காயங்­கள் ஏற்­ப­டு­வ­தைக் குறைத்­துள்­ளன.

"சுற்­றுப்­புற வெப்­ப­நிலை, வெப்ப காய சம்­ப­வங்­க­ளைத் தொடர்ந்து கண்­கா­ணிப்­போம், மேலும் பயிற்­சி­யைப் பாது­காப்­பா­ன­தாக வைத்­தி­ருக்க நட­வ­டிக்­கை­களில் தேவை­யான மாற்­றங்­க­ளைச் செய்­வோம்," என்­று தற்காப்பு அமைச்சு கூறி­யது.