உள்ளூர் விளைபொருள்களுக்கான தேவை குறைந்தது; கொவிட்-19 தொற்றுநோய் பரவலால் பண்ணைகளை அமைப்பதிலும் மேம்படுத்துவதிலும் ஏற்பட்ட தாமதம் போன்ற காரணங்களால் 2022ல் சிங்கப்பூரில் காய்கறிகள், கடல் உணவுகள், முட்டை உற்பத்தி குறைந்தது.
சீராக அதிகரித்து வந்த உள்ளூர் முட்டை உற்பத்தி, 2021ல் இங்கு பயன்படுத்தப்படும் முட்டைகளில் 30.5 விழுக்காட்டை வழங்கியது. 2022ல் இந்த அளவு 28.9% ஆகக் குறைந்துள்ளது. 2022ல் கொள்முதலான காய்கறிகளில் 4 விழுக்காட்டுக்கும் குறைவாகவே உள்ளூர் பண்ணை களில் இருந்து வந்தது. 2021ல் இது 4.3% ஆக இருந்தது. கடல் உணவைப் பொறுத்தவரை, உள்ளூர் உற்பத்தி 2022ல் 7.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று வெளியிட்ட அதன் உணவுப் புள்ளிவிவர ஆண்டறிக்கையில் இந்த விவரங்களைத் தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் 2030க்குள் அதன் ஊட்டச்சத்து தேவையில் 30 விழுக்காட்டை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. 2030 உணவுப் பாதுகாப்பு இலக்கை அடைவதற்கான வேளாண் - உணவுத் துறையின் திறனையும் அளவையும் வளர்ப்பதில் உறுதி யாக இருப்பதாக அமைப்பு கூறியது.
லிம் சு காங்கை, உயர் தொழில்நுட்ப வேளாண் உணவு மண்டலமாக மாற்றும் திட்டத்தையொட்டி, பரந்த அளவிலான உணவு உற்பத்தியை ஆதரிக்க அதிக நில ஒப்பந்தப் புள்ளிகள் அறிமுகப்படுத்தப்படும்.
குறைந்த தேவை, தங்கள் வணிகங்களை லாபகரமானதாக மாற்றுவது கடினமாக்குவதாக உள்ளூர் பண்ணைகள் கூறின. பொதுவாக இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களைவிட அவை விலை அதிகம் என்பதால் பலர் உள்ளூர் பொருள்களை வாங்கத் தயங்குகின்றனர்.
தேவை சிக்கலைச் சமாளிக்க, உள்ளூர் வேளாண் உணவுத் துறையும் சிங்கப்பூர் உணவு அமைப்பும் அண்மையில் வணிக நிறுவனங்கள் உள்ளூர் உற்பத்திக்கான நிலையான தேவையை ஏற்படுத்த ஆதரவு வழங்கும் செயற்கூட்டணியை அமைத்தன.
ஹோட்டல், உணவகம், உணவு சமைக்கும் துறைகளுக்கு உள்ளூர்ப் பண்ணைப் பொருள்களை வழங்குவதற்கான ஒரு பொதுவான தளம் ஏற்படுத்துவது இக்கூட்டணியால் முன்மொழியப்பட்ட தீர்வுகளில் ஒன்று,