ஃபோர்ப்ஸ் பட்டியலில் சிங்கப்பூரைச் சேர்ந்த 30 பேர்

ஃபோர்ப்ஸ் பட்டியலில் சிங்கப்பூரைச் சேர்ந்த 30 பேர்

1 mins read
019bf1e1-f071-4977-86ad-1d901711128a
-

இந்த ஆண்­டுக்­கான ஃபோர்ப்­ஸின் 30 வய­துக்­குட்­பட்ட ஆசிய திற­மை­யா­ளர்­கள் பட்­டி­ய­லில் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த 30 பேர் இடம்­பெற்­றுள்­ள­னர். இவர்களில் அறு­வர் சிங்­கப்­பூ­ரர்­ அல்லர் என் றாலும் இந்நாட்டைத் தள­மா­கக் கொண்டு செயல்­ப­டு­ப­வர்­கள். இந்­தப் பட்­டி­ய­லில் ஆசிய-பசி­பிக் வட்­டா­ரத்­தைச் சேர்ந்த 30 வய­துக்­குட்­பட்ட 300 இளம் தொழில்­மு­னை­வர்­களும் தலை­வர்­களும் இடம்­பெற்­றுள்­ள­னர். ஆசிய பட்­டி­ய­லில் 75 பேரு­டன் இந்­தியா முத­லி­டத்­தில் உள்­ளது. அடுத்து சீனா (34), ஜப்­பான் (33), சிங்­கப்­பூர் (30), தென்கொரியா (28) ஆகிய நாடு­கள் உள்­ளன.