ஐந்து நாடுகளை உள்ளடக்கிய வாகன மின்னூட்ட கட்டமைப்பு

ஐந்து நாடுகளை உள்ளடக்கிய வாகன மின்னூட்ட கட்டமைப்பு

1 mins read
59ca7fdf-5705-4323-9fca-fe8460973e23
-

அடுத்த ஆண்டு இறு­தி­யில், மின்­சார வாக­ன­மோட்­டி­கள் தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் உள்ள ஐந்து நாடு­களில் மின்­னூட்­டக் கட்­ட­மைப்பை அறி வார்ந்த கைப்­பேசி செயலி மூலம் பயன்­ப­டுத்­த­லாம்.

சிங்­கப்­பூரை தள­மா­கக் கொண்ட 'சார்ஜ்+' எனும் நிறு­வனம் சிங்­கப்­பூர், மலே­சியா, தாய்­லாந்து, கம்­போ­டியா, வியட்­னாம் ஆகிய நாடு­களை இணைக்­கும் 45 அதி­வேக மின்­னூட்ட நிலை­யங்­க­ளுக்­கான திட்­டத்தை அறி­வித்­துள்­ளது. இவை விரை­வுச் சாலை­க­ளி­லும் நக­ரங்­களிலும் அமைந்­தி­ருக்­கும்.

சார்ஜ்+ நிறு­வ­னத்­திற்­குச் சொந்­த­மான முதல் 18 இடங்கள் 2024ம் ஆண்­டின் இறு­தி­யில் சேவை­யாற்­றத் தொடங்­கும்.

இவை சிங்­கப்­பூர், கோலா­லம்­பூர், பேங்­காக், நோம்பென், ஹோ சி மின், ஹனோய் ஆகிய இடங்­களில் அமைக்­கப்­படும்.

மீத­முள்ள 27 இடங்­களை சார்ஜ்+ நிறு­வ­னம் அதன் பங்­கா­ளி­க­ளு­டன் இணைந்து உரு­வாக்­கு­கிறது. 2025 இறு­தி­யில் அவை தயா­ரா­கி­வி­டும்.

மின்­சார வாகன மின்­னூட்ட சேவைக்கு கட்­ட­ணம் செலுத்த, ஐந்து நாடு­க­ளி­லும் உள்ள நிலை­யங்­களில் சார்ஜ்+ கைப்­பேசி செய­லியை ஓட்­டு­நர்­கள் பயன்­ப­டுத்­த­லாம். இச்­செ­யலி பல்­வேறு நாடு­க­ளின் பல்­வேறு நாண­யங்­க­ளைக் கையா­ளும்.