மின்சாரம், நீராவி, கனிமங்கள் நீக்கப்பட்ட நீர் உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கும் வகையில் ஜூரோங் தீவில் ஒரு புதிய பல பயனீட்டு மையத்தை அமைக்கவுள்ளதாக செம்ப்கார்ப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அம்மையத்தை உருவாக்க $900 மில்லியன் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் அம்மையத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றும் 2026ஆம் ஆண்டு அது செயல்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
600 மெகாவாட் ஆற்றல் கொண்ட ஒரு மின்னாலையும் அம்மையத்தில் இடம்பெறும்.
அந்த மின்னாலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை 'மிட்சுபிஷி பவர் ஏஷியா பசிபிக்', 'ஜூரோங் எஞ்சினியரிங்' நிறுவனங்கள் அடங்கிய கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆலையின் நீண்டகாலப் பராமரிப்பிற்கான ஒப்பந்தமும் மிட்சுபிஷி பவர் நிறுவனத்திற்கே வழங்கப்பட்டுள்ளது.

