சிங்கப்பூரில் பெரிய அளவிலான தடுப்பூசி உற்பத்தி ஆலை

சிங்கப்பூரில் பெரிய அளவிலான தடுப்பூசி உற்பத்தி ஆலை

2 mins read
e3825088-db9a-42dd-8c63-b7ec0a238c2b
-

ஆக நவீன வச­தி­க­ளு­டன் தடுப்­பூசி மருந்­து­க­ளை­யும் சிகிச்சை முறை­க­ளை­யும் அதி­வே­கத்­தில் உற்­பத்தி செய்­யும் பெரிய அள­விலான ஆலை ஒன்று சிங்­கப்­பூ­ரில் அதி­கா­ர­பூர்­வ­மா­கத் திறக்­கப்­பட்­டுள்­ளது.

'தெர்மோ ஃபிஷர் சைன்­டி­ஃபிக் ஃபில்-பின்­னிஷ்' ஆலை ஜூரோங் வட்­டா­ரத்­தில் உள்ள ஜூ கூன் சர்க்­கி­ளில் அமைக்­கப்­பட்­டுள்­ளது. இது குறித்து 2020ஆம் ஆண்­டில் பொரு­ளி­யல் வளர்ச்­சி­க் கழ­கம் அறி­வித்­தது.

US$130 மில்­லி­யன் (S$175 மில்­லி­யன்) செல­வில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்த ஆலையை துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் நேற்று திறந்து வைத்­தார்.

"இந்­தப் புதிய ஆலை மிக­வும் பிர­சித்­தி பெற்­றது. இங்கு உற்­பத்­தி­யா­கும் தடுப்­பூ­சி­கள் வட்­டார அள­வில் நோய்க்கு எதி­ரான தாக்­குப்­பி­டிக்­கும் தன்­மையை அதி­க­ரிக்­கும்.

"சனோஃபி, பயோ­என்­டெக் நிறு­வ­னங்­கள் இங்கு முத­லீடு செய்­துள்­ளன. இப்­போது இந்த ஆலை­யும் அவற்­று­டன் சேர்ந்து உள்­ளூ­ரில் தடுப்­பூசி உற்­பத்­தி­யைப் பெருக்க முடி­யும்.

"இது சிங்­கப்­பூ­ருக்கு மட்­டு­மல்­லா­மல் ஆசிய-பசி­பிக் வட்­டா­ரத்­துக்கே எதிர்­கால சுகா­தார நெருக்­க­டி­யைத் தாக்­குப்­பி­டிக்­கும் தன்­மையை அதி­க­ரிக்­கும்," என்­றும் திரு ஹெங் விவ­ரித்­தார்.

அமெ­ரிக்க நிறு­வ­னத்­துக்­குச் சொந்­த­மான இந்த முற்­றி­லும் கிரு­மி­யற்ற ஆலை­யில், தடுப்­பூசி மருந்து, அதன் புட்டி, புட்டி அடைப்­பான் ஆகி­யவை தனித்­தனி­யாக சுத்­தம் செய்­யப்­பட்டு, பின்­னர் ஒன்று சேர்க்­கப்­படும்.

கொவிட்-19 பெருந்­தொற்­றுக்கு முன்பு, சிங்­கப்­பூ­ரில் எந்­த­வித தடுப்­பூசி உற்­பத்தி வச­தி­யும் இருந்­த­தில்லை. ஆனால், கடந்த இரண்­டரை ஆண்­டு­களில், மருந்து தயா­ரிக்­கும் ஐந்து நிறு­வ­னங்­கள் சிங்­கப்­பூ­ரில் தளம் அமைத்­துள்­ளன.

அதன் மூலம் பில்­லி­யன் கணக்­கான தடுப்­பூ­சி­கள் ஆண்டு­தோ­றும் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இது சிங்­கப்­பூரை வேக­மாக வளர்ந்து வரும் பெரிய உயிர்­மருத்­துவ மையமாக உரு­வாக்கி­யுள்­ளது.

கொவிட்-19 பெருந்­தொற்று மூலம் கிடைத்த படிப்­பி­னை­களைக்கொண்டு, சிங்­கப்­பூர் அறி­வி­யல், புத்­தாக்­கம் ஆகி­ய­வற்­றின் உத­வி­யு­டன் நோய்­களுக்­கெ­தி­ரான தனது நிலையை வலுப்­படுத்­திக்கொண்­டுள்­ளது என்­றும் துணைப் பிர­த­மர் ஹெங் கூறி­னார்.

'தெர்மோ ஃபிஷர் சைன்­டி­ஃபிக் ஃபில்-பின்­னிஷ்' நிறு­வனத்­துக்கு உல­க­மெங்­கும் 125,000 ஊழி­யர்­கள் உள்­ள­னர். அவர்­களில் 2,000 பேர் சிங்­கப்­பூ­ரில் பணி­யாற்­று­கின்­ற­னர்.