போதைப் பொருள் குற்றங்கள்: கைதான 145 பேரில் 16 வயது பெண்ணும் அடங்குவார்

1 mins read
50d6be61-bf09-4b6b-9546-c7499f1e2b9b
படம்: மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு -

போதைப் பொருள் குற்­றங்­கள் தொடர்­பில் கடந்த இரண்டு வாரங்­க­ளாக தீவு முழு­தும் மேற்­கொள்­ளப்­பட்ட திடீர் சோதனை நட­வ­டிக்­கை­களில் 145 பேர் கைது செய்­யப்­பட்­ட­னர். அவர்­களில் 16 வயது இளம் பெண்­ணும் அடங்­கு­வார்.

இம்­மா­தம் 5ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடந்த நட­வடிக்­கை­களில் பறி­மு­தல் செய்­யப்­பட்ட போதைப் பொரு­ளின் மதிப்பு கிட்­டத்­தட்ட $354,000 என்று மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு நேற்று கூறி­யது.

15 கிரா­முக்கு மேற்­பட்ட ஹெரா­யி­னைக் கடத்­தும் ஒரு­வருக்­குக் கட்­டாய மரண தண்­டனை விதிக்­கப்­படும்.

இம்­மா­தம் 8ஆம் தேதி பிடோக் சவுத் அவென்யூ 2ல் உள்ள ஒரு வீட்­டில் நடந்த சோத­னை­யில் 17 வய­துக்­கும் 21 வய­துக்­கும் இடைப்­பட்ட ஆறு இளை­யர்­கள் கைதா­கி­னர். அவர்­களில் ஒரு­வர் வெளி­நாட்­ட­வர்.

மே 11 மாலை­யில், நார்த் பிரிட்ஜ் ரோட்­டில் உள்ள ஓர் ஹோட்­ட­லில் 22 வயது ஆட­வ­ரும் 16 வயது பெண்­ணும் கைது செய்­யப்­பட்­ட­னர். பின்­னர் 19, 24 வய­து­களில் உள்ள இரு ஆட­வர்­கள் கைதா­கி­னர்.

புலன் விசா­ரணை தொடர்­கிறது.