பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து செயலியைப் பதிவிறக்கம் செய்ய அறிவுரை அதிகாரபூர்வமற்ற காவல்துறை செயலி பற்றிய புகார் தாக்கல்

பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து செயலியைப் பதிவிறக்கம் செய்ய அறிவுரை அதிகாரபூர்வமற்ற காவல்துறை செயலி பற்றிய புகார் தாக்கல்

2 mins read
d600e2d0-e325-48c8-bee2-414aa98db34e
-

அதி­கா­ர­பூர்­வ­மற்ற காவல்­துறை செயலி (Police@SG) பற்றி காவல்­து­றை­யில் புகார் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

அந்­தப் போலி செயலி, மூன்றாம் தரப்பு செயலி இணை­யத்­த­ளம் ஒன்­றில் இடம்­பெற்று இருந்­தது. இந்த விவ­கா­ரம் பற்றி தனக்­குத் தெரி­யும் என்று காவல்­துறை நேற்று ஃபேஸ்புக் பதி­வில் குறிப்­பிட்­டது.

கூகல் பிளே ஸ்டோர், ஆப்­பிள் ஸ்டோர் போன்ற அதி­கா­ர­பூர்­வ­மான தளங்­களில் இருந்து காவல்­துறை செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­து­கொள்­ளும்­படி பொது­மக்­களுக்கு அது நினை­வூட்டி­யது.

இதன் தொடர்­பில் விவ­ரம் கேட்­ட­போது, புகார் தாக்­க­லாகி இருப்­ப­தா­க­வும் அந்த விவ­கா­ரம் பற்றி ஆரா­யப்­பட்டு வரு­வ­தா­க­வும் காவல்­துறை கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நேற்று தெரி­வித்­தது.

கைப்­பேசி போன்ற சாத­னத்­தில் இடை­வி­டா­மல் வரு­கின்ற வேண்­டு­கோள் தக­வல்­க­ளுக்குச் செவிசாய்த்து அனு­மதி கொடுத்து­விட வேண்­டாம் என்றும் இதன் தொடர்­பில் விழிப்­பு­டன் இருந்து­கொள்ளும்­ப­டி­யும் மக்­க­ளுக்கு அது ஆலோ­சனை கூறி­யது.

புதிய பாணி மோசடி தலை­காட்டி இருப்­ப­தாக இந்த வாரத் தொடக்­கத்­தில் காவல்­துறை எச்­ச­ரித்து இருந்­தது.

ஒரு­வர் போலி­யான 'ஸ்கேம்­ஷீல்டு' செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­யும்­போது அவ­ரின் சாத­னத்­தில் இடை­யூ­று­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய மென்­பொ­ருள்கள் புகுந்து­வி­டும். ஆகை­யால் மிக­வும் எச்­ச­ரிக்­கை­யாக இருந்­து­கொள்­ளும்­படி அது மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்டது.

இந்த வகை மோச­டி­யில், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊட­கத்­த­ளங்­களில் காணப்­படும் உண­வுப்பொருள் விளம்­ப­ரங்­களைப் பார்க்­கும் பொது­மக்­கள், தங்­களை அறி­யா­மல் வாட்ஸ்­அப் செயலி வழி­யாக மோசடிப் பேர்­வ­ழி­க­ளைத் தொடர்பு­கொண்டு அவற்றை வாங்க முயல்­வார்­கள்.

அந்த அப்­பா­வி­க­ளுக்கு ஒரு இணைப்பு முக­வ­ரி­ வ­ரும். அதைப் பயன்­ப­டுத்தி ஒரு செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்து அதன்­மூ­லம் பணத்­தைச் செலுத்­தும்­படி மோச­டிக்காரர்கள் கேட்­டுக்­கொள்வர். ­

பிறகு அவர்­கள் அப்­பாவி மக்­க­ளின் வங்­கிக் கணக்­கில் இருந்து அல்­லது கடன் அட்­டை­களில் இருந்து அங்­கீ­கா­ரம் இல்­லா­மல் பணத்தை எடுத்­து­விடு­வார்­கள்.

அப்­படி செய்­து­விட்டு மோசடிப்­பேர்­வ­ழி­கள் அப்­பாவி மக்­க­ளைத் தொடர்­பு­கொண்டு தங்­களை வங்கி அதி­கா­ரி­கள் போல அறி­மு­கப்­ப­டுத்­திக்கொண்டு பேசு­வார்­கள்.

ஸ்கேம்­ஷீல்டு செய­லியை கூகல் பிளே ஸ்டோ­ரில் இருந்து பதி­வி­றக்­கம் செய்­யா­தீர்­கள் என்று சொல்­வார்­கள்.

தாங்­கள் அனுப்­பும் ஒரு முக­வரி­யில் இருந்து செய­லி­யைப் பதி­வி­றக்­கம் செய்­து­கொள்­ளும்­படி மோசடி பேர்­வ­ழி­கள் மக்­களைக் கேட்­டுக்­கொள்­வார்கள்.

அப்­படி மோச­டிக்­கா­ரர்­கள் பதி­வி­றக்­கம் செய்­து­கொள்­ளும்­படி சொல்­லும் செய­லி­கள் போலிச் செய­லி­க­ளாக இருக்­கும்.

ஸ்கேம்­ஷீல்டு செயலி என்­பது மோச­டி­களில் இருந்து தப்­பிக்க உத­வும் ஒரு செயலி ஆகும். அதை பதி­வி­றக்­கம் செய்து வைத்­தி­ருந்­தால் மோசடிச் செய்தி­களை அது தடுத்­து­வி­டும்.

சட்­ட­வி­ரோத காரி­யங்­களில் பயன்­ப­டுத்­தப்­படும் தொலை­பேசி எண்­கள் மூலம் அழைப்பு வந்­தால் அத்­த­கைய அழைப்­பு­களை அது துண்­டித்­து­வி­டும்.