அதிபர் ஹலிமா யாக்கோப் இன்று முதல் வியாழக்கிழமை வரை கஸகஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணம் மேற்கொள்கிறார்.
கஸகஸ்தான் அதிபர் அழைப்பை ஏற்று அதிபர் ஹலிமா அந்த நாட்டுக்குச் செல்கிறார். அங்கு அவர், அந்த நாட்டின் அதிபர், தொழில்துறை தலைவர்களைச் சந்திப்பார். அதிபர், பிரதமர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வார்.
உஸ்பெகிஸ்தான் அதிபர் அழைப்பை ஏற்று அங்கு செல்லும் அதிபர், அந்நாட்டு அதிபரையும் தொழில்துறை தலைவர்களையும் சந்திப்பார்.
அதிபர் அலுவலகம், வெளியுறவு அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு, எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பின் அதிகாரிகள் ஆகியோர் அதிபருடன் செல்வர்.

