சிங்கப்பூர்-அமெரிக்கா 'டைகர் பாம்' பயிற்சி நிறைவு

சிங்கப்பூர்-அமெரிக்கா 'டைகர் பாம்' பயிற்சி நிறைவு

1 mins read
0b476604-5acb-4069-8a02-135cdf633c0b
-

அமெ­ரிக்கா, சிங்­கப்­பூர் ராணு­வங்­க­ளைச் சேர்ந்த சுமார் 650 வீரர்­கள் ஹவா­யியில் கிட்டத்தட்ட இரண்டு வார கால வரு­டாந்­திர பயிற்­சியை வெற்­றி­க­ர­மான முறை­யில் நடத்தி முடித்­த­னர்.

42வது டைகர் பாம் என்ற அந்­தப் பயிற்சி மே மாதம் 8ஆம் தேதி­யில் இருந்து 19ஆம் தேதி வரை ஷோஃபீல்டு ராணுவ முகாமில் நடந்­தது என்று தற்­காப்பு அமைச்சு தெரி­வித்­தது.

அந்த வரு­டாந்­திர பயிற்சி இரண்டு நாட்டு ராணு­வங்­கள் ஒத்­து­ழைக்­க­வும் உத்­தி­கள், தொழில்­நுட்­பங்­கள், நடை­முறை­க­ளைப் பகிர்ந்­து­கொள்­ள­வும் அனு­ம­தித்­தது.

அது, இரண்டு ராணு­வங்­களுக்கு இடை­யில் நீண்ட நெடு­நாள்­க­ளாக நிலவி வரும் அணுக்க உற­வின் அடை­யா­ள­மா­கத் திகழ்ந்­தது என்று அமைச்சு தெரி­வித்­தது.