பேஃபிரண்ட் அவென்யூவில் விபத்து: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது

பேஃபிரண்ட் அவென்யூவில் விபத்து: மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் கைது

1 mins read
a5ced5ae-bc4d-4298-9cf2-af920234f49d
வெள்ளிக்கிழமையன்று விபத்து நிகழ்ந்தது. படம்: எஸ்ஜி ரோட் விஜிலான்டே / ஃபேஸ்புக் -

மது அருந்திவிட்டு சாலை விபத்தை விளைவித்ததாகச் சந்தேகிக்கப்படும் 27 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அந்த ஆடவர் வாகனத்தை வேகமாக ஓட்டி சாலை சமிக்ஞைக்கு முன்பு நின்றுகொண்டிருந்த வேறொரு வாகனத்தின்மீது மோதியதாகக் கருதப்படுகிறது.

சமிக்ஞை ஒளி சிவப்பாக இருந்தபோது சந்தேக நபர் ஓட்டிக்கொண்டிருந்ததாக நம்பப்படும் 'கெட்கோ' வாடகை வாகனம் விபத்தை விபத்தை விளைவித்தது.

இச்சம்பவம் பதிவான காணொளி ஃபேஸ்புக் தளத்தின் எஸ்ஜி ரோட் விஜிலான்டே பக்கத்தில் பதிவேற்றம் செய்யட்டிருந்தது.

பேஃபிரண்ட் அவென்யூ, மெரினா புலவார்ட் சந்திப்பில் விபத்து நேர்ந்ததாக வெள்ளிக்கிழமை (19 மே) இரவு 11.55 மணியளவில் தங்களுக்குத் தகவல் வந்ததெனக் காவல்துறை தெரிவித்தது.

கார், வேன், டாக்சி ஆகிய மூன்று வாகனங்கள் விபத்துக்கு உள்ளாயின.

வேனை ஓட்டிய 28 வயது நபரும் 58 வயது டாக்சி ஓட்டுநரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது நினைவுடன் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

விசாரணை தொடர்வதாகக் காவல்துறையினர் கூறினர்.