சிலேத்தார் விரைவுச்சாலையில் நிகழ்ந்த வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் உயிரிழந்தார்.
இச்சம்பவம் சனிக்கிழமை (20 மே) காலை நிகழ்ந்தது.
புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் டென்டோர் அவென்யூவிற்குப் பிரிந்து செல்லும் பகுதிக்கு அருகே விபத்து நேர்ந்தது.
விரைவுச்சாலையின் வலது தடத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்துகிடந்த காட்சி உள்ள படங்களை வாசகர்கள் ஷின் மின் நாளிதழுக்கு அனுப்பி வைத்தனர்.
மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் வாகனங்களை ஏற்றிச் செல்லும் லாரி இருந்தது.
லாரிக்கு அருகே ஆடவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார்.
சனிக்கிழமை காலை 10.20 மணியளவில் விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் வந்ததென சிஙகப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
மாண்ட 36 பெண் உட்பட இருவர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அப்போது நினைவிழந்த நிலையில் இருந்த அவர் மருத்துவமனையில் மாண்டார்.

