சிலேத்தார் விரைவுச்சாலையில் மோட்டார் சைக்கிள் சறுக்கிக்கொண்டதில் அதில் பின்னிருக்கையில் பயணம் செய்த மாது மரணமடைந்தார்.
இந்த விபத்து புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் லென்டோர் அவென்யூக்குச் செல்லும் வழிக்கு அருகே சனிக்கிழமை காலை நிகழ்ந்தது.
விபத்து பற்றி தங்களுக்கு முற்பகல் சுமார் 10.20க்குத் தகவல் கிடைத்ததாக காவல்துறையும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும் கூறின.
இருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சுயநினைவை இழந்த நிலையிலிருந்த 36 வயது மாதும் ஒருவர். அவர் மருத்துவமனையில் இறந்து விட்டதாகக் கூறிய காவல்துறை, புலன்விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டது.

