வெஸ்ட் கோஸ்ட் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் சனிக்கிழமை இரவில் தீ மூண்டதை அடுத்து 160 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.
தீ 12வது மாடி வீட்டின் படுக்கை அறையில் மூண்டது.அந்த அறையில் மின் சைக்கிளில் பயன்படுத்தப்படும் மின்கலன் மின் இணைப்பில் பொருத்தப்பட்டு மின்சாரம் ஏற்றப்பட்டது. அதில் இருந்து தீ மூண்டிருக்கலாம் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை நேற்று தெரிவித்தது.
அந்த தீ விபத்து பற்றி சனிக்கிழமை இரவு 11.15 மணிக்குத் தகவல் கிடைத்ததாகவும் அந்தப் படை கூறியது. தீயை அந்தப் படை அணைத்தது. யாருக்கும் காயம் இல்லை.
மின்சைக்கிளை, தனிநபர் நமாட்ட வாகனங்களைப் பயன்படுத்துவோர் மின்கலன்களில் அளவுக்கு அதிக நேரம் மின்சாரத்தை ஏற்றக்கூடாது; அவர்கள் அசல் மின்கலன்களையே பயன்படுத்த வேண்டும் என்று தற்காப்புப் படை ஆலோசனை கூறி உள்ளது.
தனிநபர் நடமாட்டச் சாதனங் கள் தொடர்பான தீ சம்பவங்கள் எண்ணிக்கை சென்ற ஆண்டில் 33.3% குறைந்து 63 ஆக இருந்தது. பல ஒழுங்கு முறை நடவடிக்கைகள் நடப்புக்கு வந்ததே அதற்குக் காரணம் என்று அந்தப் படை குறிப்பிட்டது.
சம்பவங்கள் குறைந்து இருந்தாலும் இத்தகைய தீ சம்பவங்கள் அதிகாரிகளுக்கு இன்னமும் பெரும் பிரச்சினையாகவே தொடர்கின்றன.
தீ விபத்துகளில் சம்பந்தப்பட்ட வாகனங்களை நடமாட சிரமப்படுபவர்கள் பயன்படுத்துவது வழக்கம் என்பதே இதற்கான காரணம்.

