2023 முதல் காலாண்டில் சொத்து விற்பனை குறைந்தது

2023 முதல் காலாண்டில் சொத்து விற்பனை குறைந்தது

1 mins read
38700edb-1cd7-4072-ae72-fb72861d0992
-

சிட்டி டெவ­லப்­மண்ட் லிமி­டட் (சிடி­எல்) நிறு­வ­னம், இந்த ஆண்­டின் முதல் மூன்று மாதங்­களில் தனது சொத்து விற்­பனை குறைந்து இருப்­ப­தா­கத் தெரி­வித்து உள்­ளது.

புதி­தாக சொத்­து­கள் விற்­பனைக்­குக் கொடுக்­கப்­ப­டா­ததே கார­ணம் என்­றும் அது கூறி­யது. தன்­னு­டைய கூட்­டுத்தொழில் நிறு­வ­னங்­கள் இந்த ஆண்­டின் மார்ச் 31ஆம் தேதி­யு­டன் முடி­வடைந்த முதல் காலாண்­டில் 88 சொத்­து­களை விற்­றன.

அவற்­றின் மொத்த மதிப்பு $213.2 மில்­லி­யன் என்று அந்­தக் குழு­மம் குறிப்­பிட்­டது. சென்ற ஆண்­டின் முதல் காலாண்­டில் $447.9 மில்­லி­யன் மதிப்­புள்ள 188 சொத்­து­கள் கைமா­றி­ய­தாக சிடி­எல் இம்­மா­தம் 19ஆம் தேதி தெரி­வித்­தது.

உலக சூழ்­நிலை சவால்­மிக்­க­தாக இருக்­கிறது. என்­றா­லும்­கூட நிச்­ச­ய­மில்­லாத நில­வ­ரங்­களை எல்­லாம் சமா­ளித்து முத­லீட்டு வாய்ப்­பு­க­ளைத் தான் தொடர்ந்து தேடிவரப்­ போ­வ­தா­க­வும் குழு­மம் கூறி உள்­ளது.

சந்தை நில­வ­ரங்­களை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து ­வ­ரப்போவ­தா­க­வும் பொருத்­த­மான நேரத்­தில் தனது நியூ­போர்ட் ரெசி­டென்­சஸ் திட்­டத்­தில் கட்­டப்­படும் வில்­லங்­க­மில்­லாத 246 வீடு­களை விற்­பனைக்கு விடப்­போ­வ­தா­க­வும் அது குறிப்­பிட்­டுள்­ளது.