அறுவை சிகிச்சையை விரும்பி நாடும் முதியோர் அதிகரிப்பு

அறுவை சிகிச்சையை விரும்பி நாடும் முதியோர் அதிகரிப்பு

2 mins read
0f4c623f-9e36-498c-a3ff-22ceb2df2753
-

சிங்­கப்­பூர் மக்­கள் தொகை தொடர்ந்து மூப்­ப­டைந்து வருகிறது. இந்­நி­லை­யில், அறுவை சிகிச்­சையை நாடும் முதி­யோர்­எண்­ணிக்கை அதி­க­ரிக்­கிறது.

டான் டோக் செங் மருத்துவ­மனை­யைச் சேர்ந்த மூத்த ஆலோ­ச­கர் டாக்­டர் ஹாவ் குவாங் இயோங் இதுபற்றி தெரி­விக்­கை­யில் 80 வய­தும் அதற்கு அதிக வய­தும் உள்ள முதி­யோர் சிக்கலான மலக்­கு­டல் அறுவை சிகிச்சை செய்துகொள்­வது ஐந்து ஆண்­டு­க­ளுக்கு முன் 15% ஆக இருந்­தது.

அது சென்ற ஆண்­டில் 20%க்­கும் அதி­க­மா­கி­விட்­டது என்­றார்.

அதே வய­துப்­ பி­ரி­வி­ன­ரில், மார்­ப­கப் புற்­று­நோய் அறுவை சிகிச்சை செய்­து­கொண்­ட­வர்­கள் விகி­தம் 4%ல் இருந்து 10%ஐ கடந்­து­விட்­டது.

கடந்த மூன்­றாண்­டு­களில் முழங்­கால் மூட்டு மாற்று அறுவை ­சி­கிச்சை செய்துகொண்­டோர் அளவு 5%லிருந்து 9% ஆக கூடி இ­ருக்­கிறது என்­றும் அந்த மருத்­து­வர் கூறி­னார்.

பெருங்­கு­டல்/மலக்­கு­டல் புற்று­நோய் அறுவை சிகிச்சை செய்­து­கொண்ட முதி­யோர் எண்­ணிக்கை 2019க்கும் 2022க்கும் இடை­யில் 30 மடங்கு அதி­க­ரித்து இருப்­ப­தாக கூ டெக் புவாட் மருத்­து­வ­மனை கூறி­யது.

அவற்­றில் 70% சிகிச்­சை­கள் நோயா­ளி­களே விரும்பி செய்­து­கொண்­டவை.

ஆயுள் அதி­க­ரித்து இருப்­பதே இந்த அதி­க­ரிப்­புக்கு கார­ணம் என்று டாக்­டர் ஹாவ் குறிப்­பிட்­டார். சிங்­கப்­பூ­ரில் மக்­க­ளின் சரா­சரி ஆயுள் 1980ல் 72 ஆண்டு­களாக இருந்­தது. அது 2021ல் 83 ஆண்­டு­க­ளா­கி­யது.

சிங்கப்பூர் வரும் 2026வது ஆண்டுவாக்கில் 'மிக மூப்புச்' சமூகமாக ஆகிவிடும் என சுகாதார அமைச்சர் ஓங் யி காங் ஏப்ரல் மாதம் தெரிவித்தார்.

அத்தகைய ஒரு சமூக மக்களில் குறைந்தபட்சம் 21%க்கு வயது 65ஐ கடந்து இருக்கும்.

"முதியோருக்கு மயக்க மருந்து கொடுத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். இதில் அதிக ஆபத்துகள் இருக்கின்றன.

"அதேநேரத்தில் கடந்த பல ஆண்டுகளாக மருத்துவம் பற்றிய அறிவு மக்களிடையே கூடி இருக்கிறது. அறுவை சிகிச்சை மூலம் ஏற்படக்கூடிய நன்மை களை மக்கள் தெளிவாகத் தெரிந்து வைத்து இருக்கிறார்கள்," என்று இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனையின் ஆலோசகர் டாக்டர் கெவின் யிக் தெரிவித்தார்.

முதி­யோ­ருக்கு இடுப்­பில் எலும்பு முறிவு ஏற்­பட்­டால் ஓராண்டு கழித்து அத­னால் மர­ணம் ஏற்­ப­டக்­கூ­டிய வாய்ப்பு 25%. ஆனால், அறுவை சிகிச்சை செய்துகொண்­டால் அத்­த­கைய வாய்ப்பு 10%ஆகக் குறைந்­து­விடும் என்று அவர் விளக்­கி­னார்.