வியட்னாமிய ஸ்டால் கடையில் தண்ணீர் போத்தல் அளவு எலி

வியட்னாமிய ஸ்டால் கடையில் தண்ணீர் போத்தல் அளவு எலி

1 mins read
7ce84890-2b44-42fd-9519-3f2e20ad822d
-

அங் மோ கியோ­வில் செயல்­படும் வியட்­னா­மிய ரொட்டி உண­வுக் கடை­யின் உண­வுப்­பொ­ருள்­கள் அல­மா­ரியில் தண்­ணீர் போத்­தல் அள­வுக்கு எலி ஒன்று ஓடி­ய­தைப் பார்த்த பல­ரும் நடுங்­கிப் போய்­விட்­ட­னர்.

அங் மோ கியோ அவென்யூ 8ல் செயல்­படும் காப்­பிக்­க­டை­யில் உள்ள 'பான் மி சைகோன் ஸ்டால்' என்ற அந்த உண­வுக் கடை­யில் வெள்­ளிக்­கி­ழமை இரவு சுமார் 8.45 மணிக்கு இருந்த மெல்­வின் லீ என்­ப­வர் அந்த அல­மா­ரியில் பிளாஸ்­டிக் பொட்­ட­லங்­களில் சர­பு­ர­வென சத்­தம் கேட்­ட­தைக் கண்டு திரும்­பிப் பார்த்­தார்.

காற்­று­தான் கார­ண­மாக இருக்­கும் என்று நினைத்த அவர், திரும்­பத் திரும்ப சத்­தம் வந்­ததை அடுத்து உற்று பார்த்தபோது ஒரு பெரிய எலி நட­மா­டி­ய­தைக் கண்­டார்.

அந்த எலி சுமார் 500 மி.லி. தண்­ணீர் போத்­தல் அள­வுக்­குப் பெரி­தாக இருந்­தது என்­று அவர் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

அதைக் கண்ட மற்ற பலரும் அந்த அல­மா­ரியை­விட்டு வில­கி­போய்­விட்­ட­னர் என்­றும் அவர் கூறி­னார். எலி ஓடி­ய­தைக் காட்­டும் காணொளி டிக்­டாக்­கில் சனிக்­கி­ழமை இடம்­பெற்­றது.

அது 100,000க்கும் மேற்­பட்ட தடவை பார்க்­கப்­பட்டு உள்ளது.

எலி பற்றி அவர் சிங்­கப்­பூர் உணவு முகவை அமைப்­பி­டம் புகார் தெரி­வித்து இருக்­கி­றார்.