மணவிலக்கு பராமரிப்புத் தொகை தருவோர் சொத்துகளை மறைப்பது இனி சிரமமாகிவிடும்

மணவிலக்கு பராமரிப்புத் தொகை தருவோர் சொத்துகளை மறைப்பது இனி சிரமமாகிவிடும்

2 mins read
723273c4-1897-441c-8ce5-79be1d9e7cd4
-

வாழ்க்­கைத் துணை பரா­ம­ரிப்பு அம­லாக்­கத் துறை அதி­காரி களைக்கொண்ட ஒரு புதிய பிரிவு செயல்­ப­டத் தொடங்­கி ­உள்­ளது.

மண­வி­லக்­கின் பேரில் பரா­ம­ரிப்­புத் தொகையை வழங்க வேண்­டிய தேவை இருப்­ப­வர்­கள் இனி­மேல் தங்­க­ளு­டைய சொத்து­களை மறைப்­பது சிர­ம­மான ஒன்­றா­கி­வி­டும்.

அதே­போல, முன்­னாள் மனைவி போன்ற குடும்ப உறுப்­பி­ன­ருக்குக் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுக்­கா­மல் இருப்­ப­தும் இனி­மேல் சிர­ம­மா­கி­வி­டும்.

அப்­படி கொடுக்க தவறு­வோரின் சம்­ம­த­மின்றி, அவருடைய வரு­மா­னம், சொத்து­கள் பற்­றிய விவ­ரங்­களை வங்­கி­கள், வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம், மத்­திய சேமநிதிக் கழ­கம் போன்ற மூன்­றாம் தரப்­பு­களில் இருந்து அந்த அதி­கா­ரி­கள் பெற முடி­யும் என்­பதே கார­ணம்.

குடும்ப நீதி சீர­மைப்பு மசோதா என்ற ஒரு மசோ­தா­வின் ஓர் அங்­க­மாக அத்­த­கைய அதி­கா­ரி­களின் பணி­கள் அறி­விக்­கப்­பட்டு இருக்­கின்­றன.

அந்த மசோதா மே மாதம் 8ஆம் தேதி நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டது.

புதிய ஏற்­பாடு, இப்­போ­துள்ள பரா­ம­ரிப்பு பதி­வுத் துறை அதி­காரி­க­ளுக்கு மாற்­றாக இடம்­பெறு­கிறது.

இந்த விவ­ரங்­களைச் சட்ட, சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சு­க­ளுக்­கான பேச்­சா­ளர் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது. பரா­ம­ரிப்பு பதி­வுத் துறை அதி­கா­ரி­கள் முறை 2016ஆம் ஆண்டு ஒரு முன்­னோ­டித் திட்­ட­மாக அறி­மு­க­மா­னது.

பரா­ம­ரிப்­புத் தொகையைக் கொடுக்­கா­த­வர்­களை நீதி­மன்றம் அடை­யா­ளம் காண உத­வு­வதற்­கா­க­வும் அத்­த­கைய குற்­றம் புரி­வோ­ருக்குக் கடும் தண்­டனை விதிக்க ஏது­வா­க­வும் அந்த முன்­னோ­டித் திட்­டம் அறி­மு­க­மா­னது.

இப்­போ­தைய அதி­கா­ரி­களுக்கு உள்ள அதி­கா­ரம், முந்தைய பதி­வுத் துறை அதி­காரி­க­ளுக்­குக் கிடை­யாது.

அவர்­கள் முன்­னாள் கண­வரி­டம் இருந்து தக­வல்­க­ளையோ, ஆவ­ணங்­க­ளையோ கேட்டுப் பெற முடி­யாத நிலை இருந்­தது.

இப்­போ­தைய அதி­கா­ரி­களுக்குத் தேவை­யான தக­வல்­கள் கிடைத்­து­வி­டும் என்­ப­தால், உண்­மை­யி­லேயே பரா­ம­ரிப்­புத் தொகையைக் கொடுக்க இய­லா­மல் இருப்­போரை நிதி உத­வித் திட்­டங்­க­ளுக்கு அவர்­கள் பரிந்­து­ரைக்க முடி­யும்.

பரா­ம­ரிப்­புத் தொகையைத் தரக்­கூ­டிய நிலை­யில் இருந்­தும் அதைத் தர­வில்லை என்­றால் அவர்­க­ளுக்குப் பொருத்­த­மான தண்­ட­னையை முடி­வு­செய்ய நீதி­மன்­றங்­கள் இனிமேல் முன்­பை­விட சிறப்­பான ஒரு நிலை­யில் இருக்­கும்.