பிரதமருக்கு கொரோனா; நலமாக இருக்கிறார்

பிரதமருக்கு கொரோனா; நலமாக இருக்கிறார்

1 mins read
fc2968d6-d274-44a4-90a0-04fedc5e6647
-

பிர­த­மர் லீ சியன் லூங்­கிற்கு கொவிட்-19 தொற்று இருந்­தது நேற்று தெரி­ய­வந்­தது.

தென் ஆப்­பிரிக்கா, கென்யா ஆகிய நாடு­களுக்­கு அண்மை­யில் தான் பய­ணம் மேற்­கொண்ட­தா­க­வும் அப்பயணங்­க­ளுக்­குப் பிறகு தனக்கு கொவிட்-19 தொற்று இருந்­தது உறு­திப்­படுத்­தப்­பட்­ட­தா­க­வும் நேற்று ஃபேஸ்புக்­கில் திரு லீ தெரி­வித்­தார்.

இருந்­தா­லும் பொது­வாக தன் உடல்­நிலை நன்­றாக இருப்­ப­தாக அவர் குறிப்­பிட்டு இருக்­கி­றார்.

தொற்று அறி­கு­றி­கள் முழு மையாக அகலும்வரை தனி­மை­யில் இருந்து கொள்ளும்­படி மருத்­து­வர்­கள் தனக்கு ஆலோ­சனை கூறி இருப்­ப­தா­க­ அவர் குறிப்­பிட்டார்.

தன் வயதைக் கருத்­தில் கொண்டு தனக்கு 'பாக்ஸ்­லோ­விட்' என்ற மருந்தை மருத்­து­வர்­கள் பரிந்­து­ரைத்து உள்­ள­தாக 71 வயது திரு லீ குறிப்­பிட்டார்.

பிர­த­மர் ஆகக் கடை­சி­யாக சென்ற நவம்­பரில் கொவிட்-19 பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டார்.

"தயவு செய்து அப்­போ­தைக்கு அப்­போது போட்­டுக்­கொள்ள வேண்­டிய தடுப்­பூசி­யைப் போட்டுக்­கொண்டு வாருங்­கள். அத­னால் கடு­மை­யான பாதிப்­பு­கள் தவிர்க்­கப்­பட்டு­வி­டும்.

"சிங்­கப்­பூ­ரில் இனி­மேல் கொவிட்-19 கிருமி இருக்­கத்­தான்செய்­யும் என்­ப­தால் நாம் தொடர்ந்து பாது­காப்­பா­க­வும் உடல்­ந­லத்­தோ­டும் இருந்து வர­வேண்­டி­யது கட்­டா­ய­மான ஒன்று," என்று அவர் தெரி­வித்து இருக்­கி­றார்.