அமைச்சர் ஈஸ்வரன் மலேசியா பயணம்

அமைச்சர் ஈஸ்வரன் மலேசியா பயணம்

1 mins read
097c92a1-426f-4c2e-95c9-a42d59d2767a
-

சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், மலேசியாவுக்கு இன்று வரை இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணம் மேற்கொண்டுள்ளார்.

லங்காவி அனைத்துலக கடல்துறை, ஆகாயத் துறை கண்காட்சி 2023ன் அதிகார பூர்வ தொடக்க விழாவில் அவர் கலந்துகொள்வார்.

அந்தப் பயணத்தையொட்டி மலேசிய அமைச்சர்களைத் திரு ஈஸ்வரன் சந்திப்பார் என்றது போக்குவரத்து அமைச்சு.