சாலை விபத்து: காயமடைந்தார் மாது; ஓட்டுநர் ஓடிவிட்டார்

1 mins read
4fbc7705-bb8f-4bd4-8790-76480383ffde
-

கெப்­பல் ரோட்­டில் சனிக்­கி­ழமை விபத்­தில் சிக்­கிய ஒரு கார் சிதைந்­து­விட்­டது. அதில் இருந்த மாது காயம் அடைந்­தார். அந்த மாதை அப்­ப­டியே விட்­டு­விட்டு ஓட்­டு­நர் அந்த இடத்­தை­விட்டு ஓடி­விட்­டார்.

விபத்­தில் சிக்­கிய 28 வயது மாது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டார்.

அவர் அப்­போது சுய­நி­னை­வு­டன் இருந்­தார்.

ஷென்­டன் வே நோக்­கிச் செல்­லும் கெப்­பல் ரோட்­டில் நிகழ்ந்த அந்த விபத்து பற்றி ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு சுமார் 10 மணிக்குத் தங்­க­ளுக்­குத் தக­வல் கிடைத்­த­தாக காவல்­துறையும் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புத் துறை­யும் கூறின.

சேதம் அடைந்த காரைக் காட்­டும் படங்­கள் ஞாயிற்­றுக்­கிழமை இரவு எஸ்ஜி ரோடு விஜி­லண்ட் ஃபேஸ்புக் குழு­மத்­தில் இடம்­பெற்­றன. விபத்து பற்­றிய காவல்­துறை புலன்­விசாரணை தொடர்­கிறது.

அந்­தக் காரின் ஓட்­டு­நர், விபத்து நிகழ்ந்­த­தும் அந்த இடத்­தில் இருந்து ஓடி­விட்­ட­தா­க ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்­பிட்­டது.