எஸ்ஐடியின் உத்திபூர்வ தொழில்நுட்பப் பங்காளி்த்துவம்

பொங்­கோல் மின்­னி­லக்க வட்­டா­ரத்­திற்கு மாறு­வது சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­திற்கு (எஸ்­ஐடி) பெரிய சமூ­கத்­தின் ஒரு பகுதி­யா­க­வும் தொழில்­துறை­யு­டன் ஒருங்­கி­ணைக்­க­வும் வாய்ப்­ப­ளிக்­கிறது என்று கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் நேற்­றுத் தெரி­வித்­துள்­ளார்.

பொங்­கோ­லில் எஸ்ஐடி கட்டுமானத்தின் இறுதிக்கட்ட விழா­வில் நேற்று பேசிய திரு சான், இது பொங்­கோ­லின் மையப் பகு­தி­யில் அமைந்­துள்­ளது. பொங்­கோல் மின்­னி­லக்க வட்­டா­ரத்­தின் மைய­மாக இது அமை­யும்,” என்­றார்.

இது ஒரு செயல்­மு­றைப் பல்­கலைக்­க­ழ­க­மாக அதன் நிலையை வலுப்­ப­டுத்­து­வ­தற்­கான வாய்ப்­பு­களை வழங்­கு­கிறது என்று அவர் சொன்­னார். தனது சொந்த வளா­கத்­திற்­குள் செயல்­ப­டத்­தொ­டங்­கும்­போது எஸ்­ஐடி பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­க­ளு­டான அதன் தொடர்பை விட்டு­வி­டக்­கூ­டாது என்­பது கல்வி அமைச்­ச­ரின் விருப்­பம்.

“அனைத்து பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள் மற்­றும் எஸ்­ஐ­டிக்கு அப்­பாற்­பட்ட பிற நிறு­வ­னங்­க­ளு­டன் முழு­மை­யாக இணைக்­கப்­பட்­டுள்­ளதே எஸ்­ஐ­டியை ஒரு பல்­க­லைக்­க­ழ­க­மா­கத் தனித்­துக் காட்­டு­கிறது,” என்று அவர் கூறி­னார்.

இள­நி­லைப் பட்­டப்­ப­டிப்­பை­விட, முது­நி­லைப் பட்­டப்­ப­டிப்­பு­க­ளுக்­கான வாய்ப்­பு­களை விரி­வு­ப­டுத்­து­வ­து­டன் பெரி­யோர் கல்­விக்கு எஸ்­ஐடி வினை­யூக்­கி­யாக இருக்­கும் என்று தாம் எதிர்­பார்ப்­ப­தாக அவர் கூறி­னார்.

ஒவ்­வொரு குழு­வி­லும் கிட்­டத்­தட்ட 40,000 இளங்­க­லைப் பட்­ட­தா­ரி­கள் இருக்­கி­றார்­கள். ​​சிங்­கப்­பூர் வேலைச் சந்தைத் தேவை­களுக்கு ஏற்ப ஏறக்குறைய 400,000 முதல் 500,000 பெரி­ய­வர்­க­ளுக்கு மறு­ப­யிற்­சி­ய­ளிக்க வேண்­டும். எஸ்­ஐடி வயது வந்­தோ­ருக்­கான தொடர் கல்வி நிறு­வ­ன­மாக முன்­னே­றும் என்று நம்­பு­வ­தாக அமைச்­சர் சான் குறிப்­பிட்­டார்.

அதைச் செய்ய முடிந்­தால், எஸ்­ஐடி ஓர் உயர்­கல்வி நிறு­வ­ன­மாக மட்­டு­மின்றி, தொடர்ச்­சி­யான கல்­விக்­கான நிறு­வ­ன­மா­க­வும் இருக்­கும். சமூ­கத்­தில் உள்ள மக்­கள், தொழில்­து­றை­கள், பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­கள், தொழிற்­கல்வி நிலை­யங்­கள் ஆகி­ய­வற்றை எட்டி பெரி­ய­வர்­களுக்­கான கற்­றல் பாதை­யின் ஒரு மையப் புள்­ளி­யாக உரு­வா­கும் என்­றார் அமைச்­சர்.

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கம் (எஸ்­ஐடி) கட்­டம் கட்­ட­மாக பொங்­கோ­லுக்கு இடம்­மா­றும். அதன் புதிய 91,000 சதுர மீட்­டர் வளா­கத்­தில் 2024 செப்­டம்­ப­ரில் மாண­வர்­கள் வகுப்­பு­க­ளைத் தொடங்­கு­வார்­கள்.

“எஸ்­ஐடி கேம்­பஸ் ஹார்ட்”, “எஸ்­ஐடி கேம்­பஸ் கோர்ட்” இரு அடுக்­கு­க­ளைக் கொண்­டது. ஜூரோங் நக­ராண்­மைக் கழ­கத்­தின் (ஜேடிசி) பொங்­கோல் மின்­னி­லக்க வட்­டா­ரத்­தில் அமைந்­துள்ள எஸ்­ஐடி வளா­கத்­தின் கட்­டு­மா­னப் பணி­கள் மூன்­றில் இரண்டு பங்கு நிறை­வ­டைந்­துள்­ளன. 2024 இரண்­டாம் பாதி­யில் இது செயல்­ப­டத் தொடங்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தற்­போது கிட்­டத்­தட்ட 9,000 மாண­வர்­கள் உள்­ள­னர். அவர்­களும் பணி­யா­ளர்­களும், டோவர் டிரைவ் மற்­றும் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­களில் உள்ள ஆறு வளா­கங்­களில் உள்­ள­னர்.

12,000 மாண­வர்­கள் படிக்­கக்­கூ­டிய புதிய வளா­கம், 2024ல் திறக்­கப்­பட உள்­ளது. இது பொங்­கோல் கோஸ்ட் எம்­ஆர்டி நிலை­யத்­திற்கரு­கில் அமைந்­துள்­ளது.

‘த ஹாச்­சரி’ எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள இந்த 10 மாடிக் கட்­ட­டம் இணைய வழி கற்­றல், நேரடி வகுப்­பு­கள் இரண்­டை­யும் ஆத­ரிக்­க­வும், விவா­தத்தை ஊக்கு­விக்­க­வும் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள சிறிய அள­வி­லான படிக்­கும் அறை­கள் போன்ற முக்­கிய அம்­சங்­க­ளைப் பெற்­றி­ருக்­கும்.

இங்கு கிட்­டத்­தட்ட 2,200 நிர்­வாக ஊழி­யர்­களும் ஆசி­ரி­யர்­களும் இருப்­பர். அரங்­கம், பல­பயன் அரங்­கு­கள், உடற்­பயிற்­சிக் கூடங்­கள், நடன, இசை அறை­கள் போன்ற வச­தி­கள் இங்­கி­ருக்­கும்.

தொழில்­து­றைக்­கான சிங்­கப்­பூ­ரின் பல்­க­லைக்­க­ழ­கம் என்று பெயர் பெற்­றுள்ள சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கம், பொங்­கோல் மின்­னி­லக்க வட்­டா­ரத்­தில் அமைந்­தி­ருப்­பது, நிறு­வ­னங்­க­ளு­டன் பணி­பு­ரிய அதிக வாய்ப்பு­களை வழங்­கு­கிறது என்று எஸ்­ஐ­டி­யின் தலை­வர் சுவா கீ சாய்ங் கூறி­னார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!