மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரியைக் கேள்வி கேட்ட சிங்கப்பூர் ஜோடிக்கு ஆறு மாதத் தடை

மலேசிய குடிநுழைவுத் துறை அதிகாரியைக் கேள்வி கேட்ட சிங்கப்பூர் ஜோடிக்கு ஆறு மாதத் தடை

3 mins read
a8ebc82f-0ad2-4785-9b25-d5cc927d5e95
-

ஜோகூர் குடி­நு­ழை­வுச் சோத­னைச் சாவ­டி­யில் மலே­சிய குடி­நு­ழை­வுத் துறை அதி­காரி ஒரு­வர் தங்­கள் கட­வுச்­சீட்­டில் முத்­திரை பதித்த விதம் குறித்து கேள்வி எழுப்­பிய ஒரு சிங்­கப்­பூர் ஜோடிக்கு அந்­நாட்­டுக்­குள் நுழைய ஆறு மாதத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது குறித்து மலே­சி­யா­வின் நியூ ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­தழ் நேற்று செய்தி வெளி­யிட்­டி­ருந்­தது.

இச்­சம்­ப­வம் குறித்து தனது ஃபேஸ்புக்­கில் பதி­விட்ட அப்­துல் கயூம் ரஹிமும் அவர் மனை­வி­யும் மார்ச் 20ஆம் தேதி துவாஸ் சோத­னைச் சாவடி வழி­யாக ஜோகூர் பாருவை நோக்­கிப் பய­ணம் செய்­து­கொண்­டி­ருந்­த­னர்.

"ஜோகூர் குடி­நு­ழை­வுச் சோத­னைச் சாவ­டி­யில் இரண்டு குடி­நு­ழைவு முகப்­பு­கள் மட்­டுமே திறந்­தி­ருந்­த­தால், நாங்­கள் சுமார் ஒரு மணி­நே­ரம் வரி­சை­யில் காத்­தி­ருந்­தோம். நாங்­கள் முகப்பை அடைந்­த­வு­டன், எங்­கள் கட­வுச்­சீட்­டுக்கு வெளியே போடப்­பட்­டி­ருந்த அட்­டையை அகற்­று­மாறு பணி­வன்­பற்ற தொணி­யில் அந்த அதி­காரி கூறி­னார்.

"நாங்­கள் அவ்­வாறே வெளி அட்­டையை அகற்றி, அந்த பெண் அதி­கா­ரி­யி­டம் கொடுத்­தோம். எங்­கள் விவ­ரங்­க­ளைச் சரி­பார்த்த பிறகு அந்த அதி­காரி கட­வுச்­சீட்­டில் நுழைவு முத்­தி­ரை­யைப் பதித்­தார். பின்­னர் எனது கட­வுச்­சீட்­டைப் பார்த்­த­போது அதில் ஒரு பக்­கத்தை வேண்­டு­மென்றே அதி­காரி விட்­டு­விட்டு, முத்­தி­ரை­யைப் பதித்­தி­ருப்­பதை அறிந்­தேன்.

"என் மனை­வி­யின் கட­வுச்­சீட்­டில் அந்த அதி­காரி 27வது பக்­கத்­தில் முத்­தி­ரை­யிட்டு, பின்­னர் அதில் பேனை­வால் கோடு போட்டு, பின்­னர் 28வது பக்­கத்­தில் மீண்­டும் முத்­தி­ரை­யிட்­டார்," என்­றார் திரு கயூம்.

தனது மோட்­டார் சைக்­கிளை நிறுத்­தி­விட்டு, குடி­நு­ழைவு அலு­வ­ல­கத்­துக்­குச் சென்று, அந்த பெண் அதி­கா­ரிக்கு எதி­ராக புகார் கொடுக்க என்ன செய்ய வேண்­டும் என்று அங்­கி­ருந்த ஆண் அதி­காரி ஒரு­வ­ரி­டம் கேட்­டார் கயூம்.

"புகாரை இணை­யத்­தில் மூலம் பதிவு செய்­ய­லாம் என்று கூறிய அந்த அதி­காரி அதை எவ்­வாறு செய்­வது என்று கூற­வில்லை. மேலும் அதை தனது அலு­வ­ல­கத்­துக்கு வெளியே சென்று செய்­யு­மாறு கூறி­னார். இணை­யத்­தில் எவ்­வாறு செய்­வது என்று என் மனைவி தொடர்ந்து கேட்­ட­தால், அந்த அதி­காரி கோப­ம­டைந்து எங்­கள் கட­வுச்­சீட்­டு­களை அங்­குள்ள 2வது மாடி­யில் உள்ள அலு­வ­ல­கத்­துக்­குக் கொண்டு சென்­றார். நாங்­களும் பின்­தொ­டர்ந்­தோம். அங்கு எங்­கள் பெய­ரைக் குறிப்­பிட்டு, நாட்­டுக்கு நுழைய தடை விதிக்­கும் கடி­தத்தை இந்­திய பெண் உயர் அதி­காரி கையொப்­பத்­து­டன் கொடுத்­தார்," என்­றார் கயூம்.

"நாங்­கள் அந்த பெண் உயர் அதி­கா­ரி­யி­டம் நுழைவுத் தடைக்கு என்ன கார­ணம் என்று கேட்­ட­தற்கு அவர் கார­ணம் கூற­வில்லை. மாறாக, அவர் தனது குரலை உயர்த்தி, நீங்­கள் போகி­றீர்­களா அல்­லது உங்­கள் ஆறு மாதத் தடையை ஓர் ஆண்­டாக மாற்­றித் தரவா என்று கேட்­டார். முகப்­பில் உள்ள அதி­காரி பெயர் பட்டை அணிந்­தி­ருக்­க­வில்லை என்­ப­தால் அவ­ரது பெய­ரும் எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை," என்­றார் கயூம்.

"நாங்­கள் பணம் கொடுத்து கட­வுச்­சீட்­டு­க­ளைப் பெறு­கி­றோம். ஆனால் அந்த அதி­கா­ரி­கள் அதி­லுள்ள பக்­கங்­களை வீணாக்­கு­கி­றார்­கள். இதன் விளக்­கத்­தைத்­தான் நான் அறிய விரும்­பு­கி­றேன்," என்று திரு கயூம் ஃபேஸ்புக்­கில் பதி­விட்­டுள்­ளார்.

கயூ­மின் பதி­வுக்கு சிலர் ஆத­ரவு தெரி­வித்­தா­லும், முகப்­பில் உள்ள அதி­கா­ரி­கள் நூற்­றுக்­கணக்­கான கட­வுச்­சீட்­டு­க­ளுக்கு முத்­தி­ரை­யி­டு­கி­றார்­கள். அவர்­கள் பக்­கம் உள்ள நியா­யத்­தை­யும் நாம் பார்க்க வேண்­டும் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.