மாபெரும் பதவி விலகல் அலை நிறைவுபெற்றது: ஆய்வு

மாபெரும் பதவி விலகல் அலை நிறைவுபெற்றது: ஆய்வு

2 mins read
7a0bebb7-0523-47dc-b54f-f2f2f8d18248
-

திறன்­பெற்ற ஊழி­யர்­க­ளுக்­கான கடு­மை­யான பற்­றாக்­குறை கடந்த ஓராண்­டாக நிலவி வந்­தது. ஊழி­யர்­கள் தங்­க­ளுக்­குப் பிடித்த வேலை­களை நாடு­வது, தங்­க­ளுக்­குத் தோதான சம்­பளங் ­க­ளை­யும் வேலைச் சூழ்­நி­லை­யை­யும் நாடு­வது என்று ஒரு வேலை­யி­லி­ருந்து விலகி இன்­னொரு வேலை­யைத் தேர்வு செய்த முறை இப்­போது முற்­றி­லும் மாறி­விட்­டது என்று ஆய்வு ஒன்று குறிப்­பி­டு­கிறது.

ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி­த­ழுக்­காக மில்­லியூ இன்­சைட் நிறு­வ­னம் நடத்­திய ஆய்­வில், 68% சிங்­கப்­பூர் ஊழி­யர்­கள் தங்­கள் வேலை­களில் தொடர்ந்து நீடிக்க விரும்­பு­வ­தா­கத் தெரி­வித்­து

உள்­ள­னர்.

ஒப்­பு­நோக்க, கடந்த ஆண்டு நடத்­தப்­பட்ட பல்­வேறு ஆய்­வு­களில் பத்­தில் ஏழு ஊழி­யர்­கள் அடுத்த ஆறு மாதங்­க­ளுக்­குள் தங்­கள் வேலை­க­ளி­லி­ருந்து விலக விரும்­பு­வ­தா­கத் தெரி­வித்­த­னர்.

இதன் மூலம் கொவிட்-19 காலத்­தில் இருந்த இந்த பதவி வில­கல் அலை இப்­போது நிறைவு­பெ­றும் நிலை­யில் உள்­ளது என்று தெரியவரு­கிறது. அது இப்­போது பெருந்­தொற்றுக் காலத்­துக்கு முந்­திய பதவி வில­கல் நிலை­யை­விடக் குறை­வாக உள்­ளது என்று ஆட்­சேர்ப்பு நிறு­வ­னங்­கள் கூறின.

"பொரு­ளி­யல் நிலை­யில் மோச­மான மாற்­றம் தென்­ப­ட­வில்லை என்­றால் இது விரை­வில் சம­நி­லையை அடை­யக்­கூ­டும்," என்று சிங்­கப்­பூர் தேசிய முத­லா­ளி­கள் சம்­மே­ள­னத்­தின் நிர்­வாக இயக்­கு­நர் சிம் கின் குவான் தெரி­வித்­தார்.

இவ்­வாண்டு மார்ச், ஏப்­ரல் மாதங்­களில், சிங்­கப்­பூர், மலே­சியா, தாய்­லாந்து, இந்­தோ­னீ­சியா, வியட்­னாம், பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து தலா 1,000 ஊழி­யர்­கள் பங்­கேற்ற இந்த ஆய்வை மில்­லியூ நிறு­வனம் மேற்­கொண்­டது.

ஊழி­யர்­க­ளின் பதவி விலகல் குறித்து மன­மாற்­றத்­தில் ஆச்­ச­ரி­யப்­பட ஏது­மில்லை. பெருந்­தொற்றுக் காலத்­துக்­குப் பிறகு, தற்­போது அவர்­கள் பார்க்­கும் வேலை­யில் ஊழி­யர்­கள் 18 மாதங்­க­ளுக்­கும் குறை­வா­கத்­தான் பணி­யாற்­றி­யி­ருக்­கி­றார்­கள் என்­றார் மெர்­செர் ஏஷியா உல­க­ளா­விய ஆலோ­சனை நிறு­வ­னத்­தின் தலை­வர் பெட்டா லட்­டி­மர்.

"பண­வீக்க அதி­க­ரிப்பு, வாழ்க்­கைத் தர உயர்வு, பய­ணத் தேவை­யின் அதி­க­ரிப்பு போன்ற அம்­சங்­கள் வேலைப் பாது­காப்­பின் முக்­கி­யத்­து­வத்­தை­யும் நிலைத்­தன்­மை­யை­யும் ஊழி­யர்­க­ளி­டையே அதி­க­ரித்­துள்­ளது என்­றும் திரு­வாட்டி லட்­டி­மர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே, சிங்­கப்­பூ­ரின் ஊழி­யர்­கள் பதவி வில­கும் விகி­தம், பொருந்­தொற்று உச்­சத்­தைத் தொட்ட 2020ஆம் ஆண்­டைத் தவிர்த்து, கடந்த 10 ஆண்­டு­களில் ஆகக் குறைந்­துள்­ள­தா­க­வும் ஆய்வு கூறு­கிறது.