மலேசிய இணைய சூதாட்ட அழைப்பு நிலையத்தில் சோதனை; சிங்கப்பூரர் கைது

மலேசிய இணைய சூதாட்ட அழைப்பு நிலையத்தில் சோதனை; சிங்கப்பூரர் கைது

1 mins read
ba7b9d59-00f6-4013-8ab2-19e5ae8f4665
பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் சில. படம்: மலேசிய காவல்துறை -

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் இணைய சூதாட்டத்தில் ஈடுபட்ட அழைப்பு நிலையத்தில் வெள்ளிக்கிழமையன்று (19 மே) சோதனை நடத்தப்பட்டது.

கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள அந்நிலையம் வெளிநாட்டு வாடிக்கையாளர்களைக் குறிவைத்து வந்தது.

ஒரு சிங்கப்பூர் ஆடவர் உட்பட 40 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கைதானவர்கள் 28லிருந்து 58 வயதுக்கு உட்பட்டவர்கள்.

88 கைப்பேசிகள், மூன்று வாகனங்கள், பல கணினிகள் உள்ளிட்ட பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சுமார் 15,400 வெள்ளி மதிப்பிலான ரொக்கமும் பறிமுதலானது.