சிங்கப்பூரில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாட்டு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நாளை சிங்கப்பூர்த் தமிழ் அமைப்புகள் இணைந்து வரவேற்கவுள்ளன.

செவ்வாய்க்கிழமை மாலை சிங்கப்பூர் வந்தடைந்த அவர் சிறப்பு வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்வார்.

சிங்கப்பூரின் சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் சிறப்பு விருந்தினராக இணையவிருக்கிறார்.

SPH Brightcove Video

30க்கும் மேற்பட்ட சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் ஒன்றுகூடி இந்நிகழ்வுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

முதலமைச்சருடன், தமிழ்நாட்டு அரசின் தலைமைச் செயலாளர் திரு வெ. இறையன்பும் கலந்துகொண்டு உரையாற்றுவார்.  

அடுத்தாண்டு தமிழகத்தில் நடைபெறவிருக்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை முன்னிட்டு வெளிநாட்டு தொழிலதிபர்களை நேரில் சந்திக்கவுள்ளார் மு. க. ஸ்டாலின்.

சிங்கப்பூர், ஜப்பான் உட்பட சில நாடுகளுக்குச் சென்று அவர்களை ஈர்க்கும் முயற்சியில் இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

முன்னேற்பாடுகளைக் கவனிக்க தமிழக தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு, வர்த்தகத்துறை அமைச்சர் டி. ஆர். பி ராஜா திங்கட்கிழமையன்று வந்திருந்தார். 

அமைச்சர் ராஜா, முதலமைச்சர் இருவரும் சிங்கப்பூர் இந்திய வர்த்தக தொழிற்சபையின் (சிக்கி) தமிழ்நாடு முதலீட்டு மாநாட்டிலும் புதன்கிழமையன்று பங்கேற்கவுள்ளனர்.

கைடன்ஸ் இந்தியா இணைந்து படைக்கும் இந்நிகழ்வில் சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சரும் வர்த்தக உறவுகளுக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான திரு எஸ். ஈஸ்வரன், இந்தியத் தூதர் திரு பெரியசாமி குமரன், சிக்கியின் தலைவர் திரு நீல் பரேக் ஆகியோர் இணைவர். ச

ந்திப்பில் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!