வல்லுநர்கள்: கடும் வெய்யிலின்போது நிழலில் இருங்கள்; தோல் களிம்பைப் பயன்படுத்துங்கள்

வல்லுநர்கள்: கடும் வெய்யிலின்போது நிழலில் இருங்கள்; தோல் களிம்பைப் பயன்படுத்துங்கள்

2 mins read
b498fb94-fc13-43ee-8542-5b3bfedae2a8
-

வெய்­யில் கடு­மை­யாகி வெப்­ப­நிலை சாதனை அள­வுக்கு உயரும்போது சூரி­யக் கதிர்­களில் இருந்து தோலைப் பாது­காக்­கும் களிம்பைத் தட­விக்கொள்­ளுங்­கள். அல்­லது நிழ­லில் இருந்து கொள்­ளுங்­கள்.

சூரி­யக் கதிர்­கள் நேர­டி­யாக உங்­கள் மீது படா­மல் பார்த்­துக்­கொள்­ளுங்­கள் என்று வல்­லு­நர்­கள் ஆலோ­சனை கூறி இருக்­கி­றார்­கள்.

வெப்­ப­நி­லைக்­கும் புற­ஊதா கதி­ருக்­கும் இடை­யில் தொடர்பு எது­வும் இல்லை என்­றா­லும் புற­ஊதா கதிர்­க­ளின் அளவு கூடும்­போது தோலில் வியர்க்­குரு, கொப்­ப­ளம் போன்ற பிரச்­சி­னை­கள் ஏற்­ப­ட­லாம். இதர பாதிப்­பு­களுக்­கும் வாய்ப்பு உண்டு என்று அவர்­கள் தெரி­வித்­த­னர்.

புற­ஊதா கதிர் அளவு 8 முதல் 10 வரை அதி­க­மாக இருக்கையில் சூரி­யக் கதிர் உடலில் நேர­டி­யா­கப் பட்­டால் தோல், கண்­க­ளுக்கு விரை­வா­கப் பாதிப்­பு­கள் ஏற்­படலாம் என்று தோல் நிபுணர்­கள் கூறி­ய­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­துள்­ளது.

இத­னி­டையே, மே மாதம் புற­ஊ­தாக் கதிர் அளவு அட்­ட­வணை­ 10ஐ தாண்­டி­ய­தாக சிங்­கப்­பூர் வானிலை ஆய்வு நிலை­யம் தெரி­வித்­தது.

அந்த அளவு 11ஐ தாண்­டி­விட்­டால் அது உச்­ச­நி­லையை அடைந்­து­விட்­ட­தைக் குறிக்­கும்.

புற­ஊதா கதிர் அட்­ட­வணை என்­பது, சூரிய ஒளி­யின் மூலம் பூமி­யில் ஏற்­ப­டக்­கூ­டிய புற­ஊதா கதி­ரி­யக்­கத்­தின் அள­வைக் குறிப்­ப­தா­கும். ஆகக் குறை­வான அளவு 0. 3 முதல் 5 முறை அந்த அளவு இருந்­தால் அது மித­மான நிலையைக் குறிக்­கும்.

சிங்­கப்­பூரைப் பொறுத்­த­வரை அன்­றாட சரா­சரி கூடி­னபட்ச புற­ஊதா கதிர் அளவு பொது­வாக 6 முதல் 7 வரை­தான் இருக்­கும்.

இது­வ­ரை­யில் இந்த ஆண்­டில் புற­ஊதா கதிர் அட்­ட­வணை 53 நாள்­களில் 10ஐ தாண்டி இருக்­கிறது என்று வானிலை ஆய்வு நிலை­யம் தெரி­வித்­தது.

புற­ஊதா கதி­ரி­யக்க அளவை காற்­றின் வெப்­ப­நிலை பாதிப்­ப­தில்லை, காற்று மண்­ட­லத்­தில் ஓசோன் அதி­க­மாக இருந்­தால் கதி­ரி­யக்கம் குறைந்­து­விடும். மேக­மூட்­ட­மும் புற­ஊதா கதி­ரியக்­கத்தைக் குறைக்க உத­வும் என்று நிலை­யம் தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரில் மார்ச் மாதம் சூரி­யன் நில­ந­டுக்­கோட்­டிற்கு நேரே வரும். அந்த மாதத்­தில் அதிக நாள்­களில் புற­ஊதா கதிர் அட்­ட­வணை 10ஐயும் தாண்­டும்.

அந்த நாள்­களில் புற­ஊதா கதி­ரி­யக்­கம் மிகத் தீவி­ர­மாக இருக்­கும். மார்ச் 2ஆம் தேதி­யும் மார்ச் 8ஆம் தேதி­யும் புற­ஊதா அட்­ட­வணை 13ஐ தொட்­டது.