சிங்கப்பூரில் தமிழக முதல்வர்: அமைச்சர்கள் சந்திப்பு; மாநாடு

சிங்­கப்­பூ­ருக்கு அதி­கா­ரத்­துவ வருகை மேற்­கொண்­டுள்ள தமிழ்­நாட்டின் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டா­லி­னுக்கு முப்­ப­துக்­கும் மேற்­பட்ட சிங்­கப்­பூர் தமிழ் அமைப்­பு­கள் ஒன்­று­கூடி வர­வேற்பு அளிக்­கின்­றன.

இன்று இரவு 7 மணிக்கு சன்­டெக் சிட்டி மாநாட்டு மண்­ட­பத்­தில் நடை­பெ­றும் அந்­தச் சிறப்பு வர­வேற்பு நிகழ்ச்­சி­யில் சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் சிறப்பு விருந்­தி­ன­ரா­கப் பங்­கேற்­கி­றார். முன்­ப­திவு செய்து அழைப்­பி­தழ் பெற்­ற­வர்­கள் மட்­டுமே நிகழ்­வில் கலந்­து­கொள்­ள­லாம்.

அடுத்­தாண்டு தமி­ழ­கத்­தில் நடை­பெற இருக்­கும் உலக முத­லீட்­டா­ளர்­கள் மாநாட்­டினை முன்­னிட்டு வெளி­நாட்டு தொழிலதி பர்­களை திரு ஸ்டா­லின் சந்­திப்பார்.

முதல்­வ­ரு­டன் வந்துள்ள தமி­ழக தொழில், முத­லீட்டு ஊக்­கு­விப்பு, வர்த்­த­கத்­துறை அமைச்­சர் டி.ஆர்.பி ராஜா, முதல்வர் இரு­வ­ரும் சிங்­கப்­பூர் இந்திய வர்த்­தக தொழிற்­ச­பை­யின் (சிக்கி) தமிழ்­நாடு முத­லீட்டு மாநாட்­டி­லும் இன்று பங்­கேற்பர்.

கைடன்ஸ் இந்­தியா இணைந்து நடத்தும் அந்த மாநாட்­டில் போக்­கு­வ­ரத்து அமைச்சரும் வர்த்­தக உற­வு­க­ளுக்­குப் பொறுப்பு வகிக்­கும் அமைச்­ச­ரு­மான திரு எஸ் ஈஸ்­வ­ரன், இந்­தி­யத் தூதர் திரு பெரி­ய­சாமி கும­ரன், சிக்­கி­யின் தலை­வர் திரு நீல் பரேக் ஆகி­யோரும் கலந்­து­கொள்­வர்.

சிங்­கப்­பூர் நிறு­வ­னங்­க­ளுக்­கும் தமிழ்­நாட்டு அர­சாங்­கத்­துக்­கும் இடை­யே­யான புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­களும் கையெ­ழுத்­தாக உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!