விலங்குவதை: விசாரணை

விலங்குவதை: விசாரணை

1 mins read
2139b1f8-88a9-47e8-af83-1cb2de7be874
-

இரண்டு விலங்­கு­வதை சம்­ப­வங்­கள் நிகழ்ந்து இருப்­ப­தாக சந்­தே­கம் எழுந்­துள்­ளது. அதை அடுத்து அவை பற்றி புலன்­விசாரணை நடந்து வரு­வ­தாக விலங்கு, கால்­நடை சேவை அமைப்பு கூறி­யது.

ஹவ்­காங்­கில் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழக புளோக் ஒன்­றின் அடி­வா­ரத்­தில் ஒரு பூனை இறந்து கிடந்­தது. ஜூச்­சி­யாட்­டில் ஹேக் ரோட்­டில் பூனை­களைக் காண­வில்லை என்று கவலை தெரி­விக்­கப்­பட்டது.

இது பற்றி கேட்­ட­தற்குப் பதில் அளித்த அந்த அமைப்பின் குழும இயக்­கு­நர் திரு­வாட்டி ஜெசிக்கா குவோக், இந்த இரு சம்­ப­வங்­கள் பற்றி வி­சா­ரணை நடப்­ப­தா­கக் கூறி­னார்.

இச்­சம்­ப­வங்­கள் தொடர்­பில் ஊக­மாக எந்­தத் தக­வல்­க­ளை­யும் தெரி­விக்க வேண்­டாம் என்­றும் பாதிப்பு இடை­யூறு இன்றி புலன்­வி­சா­ரணை நடக்க உத­வும்­ப­டி­யும் பொது­மக்­களை அந்­தக் குழும இயக்­கு­நர் கேட்­டுக்­கொண்டு உள்­ளார்.