கெரோசலில் 128 பேரை ஏமாற்றியவருக்குச் சிறை

கெரோசலில் 128 பேரை ஏமாற்றியவருக்குச் சிறை

2 mins read
be298b7a-dadd-474a-9168-6c992099555b
-

மின் வர்த்­த­கத் தள­மான 'கெரோ­சல்' மூலம் தாம் ஏமாற்­றிய 13 பேரி­டம் அவர்­க­ளி­ட­மி­ருந்து பறித்த தொகையை முழு­மை­யா­கத் திருப்­பிக் கொடுக்க இருந்­த­போது மீண்­டும் மோசடி குற்­றத்­தைப் புரிந்­தார் 23 வயது நிக்­க­லஸ் ஓங் சான் ஹுய்.

அதே தளத்­தில் மீண்­டும் குற்­றம்­பு­ரிந்து 128 பேரை அவர் ஏமாற்­றி­னார். இந்த 128 பேரும் ஓங்­கி­டம் கிட்­டத்­தட்ட $148,000 இழந்­த­னர்.

தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்ட ஓங்­கிற்கு 23 மாதங்­கள், ஆறு வாரச் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

2020ஆம் ஆண்­டில் கெரோ­ச­ல் மூலம் 'சிக்­ரட்­லேப்' நாற்­கா­லி­க­ளின் விற்­பனை தொடர்­பான மோச­டி­யில் ஈடு­பட்­ட­போது, ஒங் முழு­நேர தேசிய சேவை­யா­ள­ராக இருந்­தார்.

அந்த மோச­டி­யில், 13 பேர் மொத்­தம் $4,359 இழந்­த­னர்.

இந்த வழக்கு தொடர்­பான விவ­ரங்­களை நீதி­மன்ற ஆவ­ணங்­கள் வெளி­யி­ட­வில்லை.

ஆனால், 2021ல் தேசிய சேவையை முடித்த ஒங், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அவர்­கள் இழந்த முழுத்­தொ­கை­யை­யும் திருப்­பிக்­கொ­டுத்­து­வந்த வேளை­யில், மீண்­டும் குற்­றம் புரிந்து மேலும் அதி­க­மா­னோரை ஏமாற்­றி­னார்.

இது­வரை முத­லில் நடந்த மோச­டி­யில் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு அவர் முழுத் தொகை­யைத் திருப்­பிக்­கொ­டுக்­க­வில்லை. இன்­னும் $2,413 எஞ்­சி­யுள்­ளது.

2021ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதிக்­கும் 2022ஆம் ஆண்டு ஜன­வரி 26ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில், 'ஐஃபோன்', 'பிளேஸ்­டே­ஷன் 5' போன்ற பொருள்­கள் தம்மிடம் விற்­பனைக்­கு உள்­ள­தாக, கெரோ­ச­லில் ஒங் பாசாங்கு செய்­தார்.

வாடிக்­கை­யா­ளர்­கள் அவற்­றுக்கான முழுத்தொகையை முன்­கூட்­டியே செலுத்­த­வேண்டும் என்­றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

ஏறத்தாழ $148,000 இழந்த 128 பேர் சம்­பந்­தப்­பட்ட மோச­டி­யில், அவர் $3,400 மட்­டுமே திருப்­பிக் கொடுத்­தி­ருந்­தார்.

ஓங்கிற்கு சூதாட்டப் பழக்கம் இருந்ததாகவும் நடந்தது குறித்து அவர் வருத்தம் தெரிவிப்பதாகவும் அவரது வழக்கறிஞர் கூறினார்.

ஒங்­ $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் அடுத்த மாதம் 20ஆம் தேதி, தமது சிறைத் தண்­ட­னை­யைத் தொடங்க அரசு நீதி­மன்­றத்­தில் சர­ண­டை­ய­வேண்­டும்.