ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக முன்னாள் காப்புறுதி முகவருக்கு எட்டு ஆண்டு தடை உத்தரவை சிங்கப்பூர் நாணய ஆணையம் பிறப்பித்துள்ளது.
ஜேம்ஸ் இயோ சியூ லியாங், கிட்டத்தட்ட $93,000 மதிப்பிலான லஞ்சங்களைக் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
தடைக்காலத்தின்போது அவர் எவ்வித நிதிசார்ந்த ஆலோசனைச் சேவைகளை வழங்கவோ, எந்த ஒரு காப்பீட்டு இடைத்தரகரின் நிர்வாகத்தில் ஈடுபடவோ கூடாது.
2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஜூன் மாதம் வரை, ஏஐஜி பசிபிக் இன்ஷூரன்ஸ் மற்றும் லிபர்டி இன்ஷூரன்சின் முன்னாள் முகவரான இயோ, இந்தோனீசியத் தூதரக அதிகாரி ஒருவருக்கு எட்டு முறை $72,211 மதிப்பிலான லஞ்சம் வழங்கினார். இந்தோனீசிய வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களின் முதலாளிகளிக்குச் செயல்திறன் பத்திரங்களை விற்பதற்கு, ஏஐஜி நிறுவனத்திற்குச் சான்றளித்ததற்கான வெகுமதியாக அவர் அந்த லஞ்சத்தை வழங்கினார்.
இயோவுக்கு 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 28ல் 15 மாதச் சிறையும் $21,363.30 அபராதமும் விதிக்கப்பட்டது. ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஐந்தாண்டுவரை சிறைத் தண்டனை, $100,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

