தகவல்தொடர்பு துறைக்கு $3.3 பில்லியன் ஒதுக்கீடு

தகவல்தொடர்பு துறைக்கு $3.3 பில்லியன் ஒதுக்கீடு

2 mins read
963551b6-702b-43d8-a0d6-080002f88d7d
-

அர­சாங்­கம் இவ்­வாண்டு தக­வல்­தொ­டர்­புத் தொழில்­நுட்­பத்­தில் $3.3 பில்­லி­யன் செல­வி­டும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக அர­சாங்­கத் தொழில்­நுட்ப அமைப்பு (கவ்­டெக்) கூறி­யது.

இந்த 3.3 பில்­லி­யன் வெள்­ளி­யில் கிட்­டத்­தட்ட 2.5 பில்­லி­யன் வெள்ளி, மொத்த ஒப்பந்தப்புள்ளி கள் மூலம் வழங்­கப்­படும் தக­வல்­தொ­டர்­புத் தொழில்­நுட்­பத் திட்­டங்­க­ளுக்­குச் செல்­லும்

இந்த ஆண்டு திட்­ட­மி­டப்­பட்­டுள்ள செல­வி­னங்­களில் ஏறக்­கு­றைய $1 பில்­லி­யன் அர­சாங்­கத்­தின் வணிக ரீதி­யான 'கிள­வுட்' தள உரு­வாக்­கத்­திற்­குச் செல்­லும். இது வணிக ரீதி­யான கிள­வுட் தீர்­வு­களை அரசு நிறு­வனங்­கள் செயல்­ப­டுத்த அனு­மதிக்­கும் தள­மா­கும்.

கடந்த 2021லும், 2022லும் முன்­னு­ரைக்­கப்­பட்ட ஆண்­டுக்கு $3.8 பில்­லி­யன் வெள்ளி ஆண்­டுச் செல­வி­னத்­தைக் காட்­டி­லும் அது குறைவு. கடந்த ஐந்­தாண்டுகளில் அர­சாங்­கம் தக­வல்­தொ­டர்­புத் தொழில்­நுட்­பத்­தில் கிட்­டத்­தட்ட $16 பில்­லி­யன் முத­லீடு செய்­துள்­ளது.

தக­வல்­தொ­டர்­புத் தொழில்­நுட்­பத்­தில் இவ்­வாண்­டு அரசாங்கச் செல­வி­னத்­தின் ஒரு பகு­தி­யாக அர­சாங்­கச் சேவை­யில் 100,000க்கும் மேற்­பட்ட கணி­னி­களும் பிரிண்­டர்­களும் இவ்­வாண்டு மாற்­றப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மூவாண்­டு­க­ளுக்கு ஒரு­முறை மாற்­றப்­படும் அத்­த­கைய சாத­னங்­க­ளுக்­குக் கிட்­டத்­தட்ட $400 மில்­லி­யன் செல­வி­டப்­படும் என்று கவ்­டெக் நேற்று கூறி­யது.

தனிப் பயன்­பாட்­டுக்­கான கணி­னி­க­ளை­யும் பிரிண்­டர்­க­ளை­யும் மாற்­றும் நட­வ­டிக்­கைக்கு விநி­யோ­கிப்­பா­ளர்­கள் தகுந்த சுற்­றுப்­புற, எரி­சக்­தித் தரங்­க­ளைப் பூர்த்­தி­செய்­ய­ வேண்­டும். அது, இவ்­வாண்டு இடம்­பெ­றும் மூன்று பெரி­ய­ள­வி­லான முக்­கிய ஒப்பந்தப்புள்ளிகளில் ஒன்று.

இரண்­டா­வது, வாடிக்­கை­யா­ளர் தொடர்பு நிர்­வா­கம், சம்­பவ நிர்­வா­கம், மென்­பொ­ருள் செயலி­களை உரு­வாக்­கு­வ­தற்­குத் தேவை­யான குறி­யாக்­கத்­தைக் குறைக்­கும் தளங்­கள் ஆகி­ய­வற்­றுக்கு அர­சாங்க அமைப்­பு­களுக்கு சந்தா அடிப்­ப­டை­யி­லான மென்­பொ­ருளை வழங்­கு­வதற்­கான $600 மில்­லி­யன் ஏலக் குத்­தகை.

மூன்­றா­வது, அமைப்­பு­கள் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய கணி­னித் தொழில்­நுட்­பச் சேவை­க­ளுக்­கான $850 மில்­லி­யன் ஒப்பந்தப்புள்ளி­யா­கும்.