சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிரான ரிங்கிட் மதிப்பு 3.4 ஆக சரிந்தது

சிங்கப்பூர் வெள்ளிக்கு எதிரான ரிங்கிட் மதிப்பு 3.4 ஆக சரிந்தது

1 mins read
f1082794-bd7c-4947-8b2b-f4d6044c2fa6
-

சிங்­கப்­பூர் டால­ருக்கு எதி­ரான மலே­சிய ரிங்­கிட் தொடர்ந்து வலு­வி­ழந்து நேற்று 3.4102 ஆக சரிந்­தது.

திங்­கட்­கி­ழமை 3.38லிருந்து செவ்­வாய் 3.39 ஆக குறைந்­தது என்று ப்ளூம்­பெர்க் தரவு காட்­டு­கிறது. இதற்கு முன் கடந்த நவம்­பர் மாதம் 3.3764 ஆக இருந்­தது.

அண்­மைய வீழ்ச்­சி­யு­டன், இந்த ஆண்­டுத் தொடக்­கத்­தி­லி­ருந்து ரிங்­கிட்­டின் மதிப்பு 4.15 விழுக்­காடு சரிந்­துள்­ளது.

மூலப்­பொ­ருள்­க­ளின் விலை மேலும் குறைந்­தால் சீனா­வின் பொரு­ளி­யல் வளர்ச்சி குறைந்து, அமெ­ரிக்க டாலர் தொடர்ந்து வலு­வ­டைந்­தால், ஒரு மாதத்­திற்­குள் சிங்­கப்­பூர் வெள்­ளிக்கு எதி­ரான ரிங்­கிட் மதிப்பு மேலும் குறைந்து 3.45 ஆக­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது என்று மேபாங்க் தலைமை அந்­நிய செலா­வணி நிபு­ணர் சக்­தி­யாண்டி சுபாத் கூறி­னார்.

"உல­க­ளா­விய பொரு­ளி­யல் கவ­லை­கள் அதி­க­ரித்து வரும் நிலை­யில், கச்சா எண்­ணெய், செம்­பனை எண்­ணெய் மூலப் பொருள்­க­ளின் விலைச்சரிவு, அண்­மைய காலங்­களில் ரிங்­கிட்­டைப் பாதித்­தி­ருக்­க­லாம்," என்று அவர் தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் கூறி­னார்.

சிங்­கப்­பூ­ரில் பணி­பு­ரி­யும் மலே­சி­யர்­க­ளுக்கு செலா­வணி விகி­தம் வர­வேற்­கத்­தக்க செய்­தி­யாக இருக்­கும். அத்­து­டன், ரிங்­கிட்­டின் தேவை வலு­வாக இருக்­கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

மேலும் அதி­க­மான மலே­சி­யர்­கள் சிங்­கப்­பூ­ரில் வேலை­ மேற்­கொள்­ளக்கூடும் என்­ப­தால், இது மலே­சியா எதிர்­கொள்­ளும் திற­னா­ளர் பிரச்­சி­னையை அதி­க­ரிக்­கக்­கூ­டும்.