ஐந்து மாதங்களில் எட்டு மோசடிக் கும்பல்கள் சிக்கின

ஐந்து மாதங்களில் எட்டு மோசடிக் கும்பல்கள் சிக்கின

1 mins read
499d8504-3906-4d0c-98c1-0af694f8c3b6
-

சென்ற 2022ஆம் ஆண்டு 13 மோச­டிக் கும்­பல்­கள் பிடி­பட்­டன.

ஆனால், இவ்­வாண்டு இது­வரை வெளி­நாட்டு அம­லாக்­கப் பிரி­வு­க­ளின் உத­வி­யு­டன் எட்டு மோச­டிக் கும்­பல்­கள் பிடி­பட்­டுள்­ளன. இப்­படி மோச­டி­கள் அதி­க­ரித்து வரும் நிலை­யில், காவல்­து­றை­யி­னர் தங்­க­ளால் முடிந்த அனைத்து நட­வ­டிக்­கை­க­ளை­யும் எடுத்து வரு­கின்­ற­னர்.

நேற்று ஆர்ச்­சர்ட் ஹோட்­ட­லில் உள்­துறை அமைச்­சின் ஏற்­பாட்­டில் பதவி உயர்வு நிகழ்ச்சி ஒன்று நடை­பெற்­றது.

அதில் 351 உள்­து­றைக் குழு அதி­கா­ரி­கள் கௌர­விக்­கப்­பட்­ட­னர்.

அவர்­களில், மோச­டிக் கும்­பல்­கள் தொடர்­பாக முனைப்­பு­டன் செய­லாற்­றிய காவல்­துறை அதி­கா­ரி­களும் அடங்­கு­வர்.

கடந்த 2022ஆம் ஆண்டு மோச­டிக் கும்­பல்­க­ளின் கைவ­ரி­சை­யால் பாதிக்­கப்­பட்­டோர் $660.7 மில்­லி­யன் இழந்­த­னர்.

இது 2021ஆம் ஆண்­டில் இழந்த $$632 மில்­லி­ய­னை­விட அதி­கம்.

ஒட்­டு­மொத்­த­மா­கப் பார்த்­தால், இரண்டு ஆண்­டு­களில் மோச­டி­க­ளுக்கு பலி­யா­னோர் $1.3 பில்­லி­யனை இழந்­துள்­ள­னர்.

இந்த கால­கட்­டத்­தில் மோச­டி­க­ளின் எண்­ணிக்கை 32.6% அதி­க­ரித்­துள்­ளது கவ­னிக்­கத்­தக்­கது.