சட்டவிரோத சூதாட்டம்: 89 பேரிடம் விசாரணை

சட்டவிரோத சூதாட்டம்: 89 பேரிடம் விசாரணை

1 mins read
29e6c85b-c590-4255-a432-18aef56cbb49
-

சட்­ட­வி­ரோத குதி­ரைப் பந்­த­யப் பிடிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் நான்கு பெண்­கள் உட்­பட மொத்­தம் 89 பேரி­டம் விசா­ரணை நடத்­தப்­ப­டு­கிறது.

தீவு முழு­தும் 10 நாள்­க­ளுக்கு நடத்­தப்­பட்ட சோத­னை­யில், புக்கிட் பாத்­தோக், பியோ கிர­சண்ட், புக்­கிட் மேரா, சைனா­ட­வுன் போன்ற பகு­தி­களில் அவர்­கள் பிடி­பட்­ட­தாக காவல்­து­றை­யி­னர் தெரி­வித்­த­னர். அவர்­கள் 38க்கும் 84 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

கணக்­கா­ளர்­க­ளா­வும் உத­வி­யா­ளர்­க­ளா­க­வும் பந்­த­யம் கட்­டு­ப­வர்­க­ளா­க­வும் சட்­ட­வி­ரோ­த­மாக அவர்­கள் செயல்­பட்­ட­தாக நம்­பப்­ப­டு­வ­தாக முதற்­கட்ட விசா­ர­ணை­கள் காட்­டின. காவல்­து­றை­யி­னர் $64,000க்கும் அதி­க­மான ரொக்­கம், கைப்­பே­சி­கள், குதி­ரைப் பந்­த­யப் பிடிப்­புக் கரு­வி­கள் ஆகி­ய­வற்­றைக் கைப்­பற்­றி­னர்.

காவல்­துறை விசா­ரணை தொடர்­கிறது.

சட்­ட­வி­ரோத சூதாட்ட நட­வடிக்­கை­களில் ஈடு­ப­டு­வோ­ருக்கு $500,000 வரை அப­ரா­தம், ஏழாண்டு வரை சிறை­யும் விதிக்­கப்­ப­ட­லாம்.

சட்­ட­வி­ரோத சூதாட்­டத்­தில் பந்­த­யம் கட்­டு­வோ­ருக்கு குற்­றம் நிரூ­பிக்­கப்­பட்­டால் $10,000 வரை அப­ரா­தம், ஆறு மாதம் வரை சிறைத்­தண்­டனை அல்­லது இரண்­டுமே விதிக்­கப்­ப­ட­லாம்.