ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் பராமரிப்புப் பணி வட்ட ரயில் பாதையில் பயண நேரம் தாமதமாகும்

ஜூன், ஜூலை மாதங்களில் கூடுதல் பராமரிப்புப் பணி வட்ட ரயில் பாதையில் பயண நேரம் தாமதமாகும்

2 mins read
2cec194e-e379-41e3-92f0-eb54836089aa
-

வட்ட ரயில் சுரங்­கப்­பா­தை­யில் மேற்­கொள்­ளப்­படும் பரா­ம­ரிப்­புப் பணி­கள் கார­ண­மாக பய­ணி­கள் ஜூன் 11 முதல் ஜூலை 20 வரை 30 நிமி­டங்­கள்­வரை தாம­தத்தை எதிர்­பார்க்­க­லாம்.

டோபி காட், பிராஸ் பாசா, எஸ்­பி­ள­னேட், புரோ­ம­னேட், நிக்­கல் ஹைவே, மரினா பே, பேஃபிரண்ட் ஆகிய ஏழு நிலை­யங்­களில் சேவை பாதிக்­கும் என்று நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யம் (எல்­டிஏ) நேற்­றுத் தெரி­வித்­தது.

பரா­ம­ரிப்­புப் பணி­கள் நடை­பெ­றும் ஆறு வார காலத்தில் பெரும்­பா­லான நாட்­களில் இரவு 9 மணி முதல் ஒரே ஒரு நடை­மே­டை­யில் இருந்து ரயில்­கள் இயக்­கப்­படும்.

ரயில் சேவை பாதிக்­கப்­பட்ட நிலை­யங்­க­ளுக்கு இடைவழிச் சேவை­யாக இரு ரயில் சேவை­கள் செயல்­படும்.

புரோ­ம­னேட், நிக்­கல் ஹைவே, நிலை­யங்­க­ளுக்கு இடையே உள்ள வட்ட ரயில் பாதை­யின் சுரங்­கப்­ பா­தை­யில் ஒரு பகுதி "அதிக அழுத்­தத்­திற்கு உட்­பட்­டது" என்று வழக்­க­மான சோத­னை­யின்­போது தெரி­ய­ வந்­ததாக ஆணை­யம் கூறி­யது. எனி­னும் அது குறித்து விரி­வான விளக்­கங்­களை அது வெளி­யி­ட­வில்லை.

"வட்ட ரயில் பாதை­யின் ரயில் சேவை­க்கு இது எந்­தப் பாது­காப்பு அபா­யத்­தை­யும் ஏற்­ப­டுத்­தாது என்று மதிப்­பிட்­டுள்­ளது," என்று ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

எனி­னும், சுரங்­கப்­ பாதை நீண்­ட­கா­லம் தாக்­குப்­பி­டிக்­கக்­கூ­டிய தன்­மை­யு­டை­ய­தாக இருப்­பதை உறு­தி­செய்ய சுரங்­கப்­பாதை உரு­ளை­க­ளுக்கு இரும்பு நிறு­வு­வது உட்­பட முன்­னெச்­ச­ரிக்கை பரா­ம­ரிப்பு, வலுப்­ப­டுத்­தும் பணி­களை மேற்­கொள்­வதா­க­வும் அது கூறி­யது.

இந்த பணி­களை மேற்­கொள்ள அனு­ம­திக்­கும் வகை­யில், ஜூன் 11 முதல் ஜூலை 20 வரை­யி­லான காலத்தில் இரவு 9 மணி முதல் இயக்க நேரம் முடி­யும் வரை இடைவழிச் சேவை­யாக (ஷட்டல்) ஏழு நிலை­யங்­க­ளி­லும் ரயில்­கள் இயக்­கப்­படும்.

ஜூன் 16 முதல் 18 வரை­யும், 24, 28, 29 ஆகிய நாள்­க­ளி­லும் ஜூலை 1, 2, 7, 8 ஆகிய தேதி­க­ளி­லும் 14 முதல் 16 வரை­யும் ரயில்­கள் வழக்­க­மாக இயங்­கும், எந்த இடை­யூ­றும் இருக்­காது.

இரண்டு இடைவழிச் சேவை­கள் இயங்­கும். ஒன்று டோபி காட் - ரோம­னேட் இடையே 15 நிமிட இடை­வெ­ளி­யில் இயங்­கும். மற்­றொன்று மெரினா பே - ஸ்டே­டி­யம் நிலை­யங்­க­ளுக்கு இடையே 20 நிமி­டங்­க­ளுக்கு இடையே சேவை­யாற்­றும்.

மேலும் விவ­ரங்­க­ளுக்கு எல்­டி­ஏ­யின் MyTransport.SG செயலி மற்­றும் சமூக ஊட­கத் தளங்­களை­யும், வட்ட ரயில் பாதையை நிர்­வ­கிக்­கும் எஸ்எம்ஆர்ட்டியை நாடவும்.

சுவ­ரொட்­டி­கள், நிலைய அறி­விப்­பு­கள் அனைத்து வட்ட ரயில் பாதை ரயில் நிலை­யங்­க­ளி­லும் மற்­றும் வட்ட ரயில் பாதை நிலை­யங்­க­ளு­ட­னான இணைப்பு நிலை­யங்­க­ளி­லும் இடம்­பெ­றும். மேலும் பாதிக்­கப்­படும் ஏழு நிலை­யங்­க­ளி­லும் உத­விக்கு ஊழி­யர்­கள் இருப்­பார்­கள் என்று ஆணை­யம் தெரி­வித்­தது.