மனிதவள அமைச்சு 2024க்கான பொது விடுமுறைகளை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு, ஐந்து நீண்ட வாரயிறுதிகள் வருகின்றன. சீனப் புத்தாண்டு (பிப். 10, 11) சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் திங்கள் பொது விடுமுறையாக இருக்கும். புத்தாண்டு (ஜனவரி 1), புனித வெள்ளி (மார்ச் 29), ஹஜ்ஜுப் பெருநாள் (ஜூன் 17), தேசிய தினம் (ஆகஸ்ட் 9) ஆகியவை வார இறுதியுடன் சேர்ந்து வரும் பொதுவிடுமுறைகள்.
மற்ற விடுமுறைகள்: ரமலான் (ஏப்ரல் 10), மே தினம் (மே 1), விசாக தினம் (மே 22), தீபாவளி (அக்டோபர் 31), கிறிஸ்மஸ் (டிசம்பர் 25).
இங்கு 11 பொது விடுமுறை நாள்கள் உள்ளன.

