எஸ்ஐஏ: மாஸ்கோ அலுவலகம் மூடல்

எஸ்ஐஏ: மாஸ்கோ அலுவலகம் மூடல்

1 mins read
18cc9cb4-de26-4721-9fc0-228ab592db20
-

சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் (எஸ்­ஐஏ), மாஸ்­கோ­வி­லுள்ள அதன் அலு­வ­ல­கத்தை மூடி­யுள்­ளது. அது மே 15ஆம் தேதி மூடப்­பட்­ட­தாக எஸ்­ஐஏ பேச்­சா­ளர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸி­டம் கூறி­னார். எஸ்­ஐஏ-யின் பொது விற்பனை முக­வ­ரான 'ஏவி­ய­ரெப்ஸ்', விமான சேவை நிறு­வ­னத்தை ரஷ்­யா­வில் பிரதி­நி­திக்­கும் என்றார் அவர். பிப்­ர­வரி 24ஆம் தேதி, உக்­ரேன்­மீது ரஷ்யா படை­யெ­டுத்த நான்கு நாள்­க­ளுக்­கு மாஸ்கோ விமா­னச் சேவை­யைத் தற்­கா­லி­க­மாக நிறுத்து­வ­தாக 2022 பிப்­ர­வரி 28ஆம் தேதி எஸ்­ஐஏ அறி­வித்தி­ருந்­தது.